Published : 01 Aug 2022 04:23 PM
Last Updated : 01 Aug 2022 04:23 PM

காதலியைக் கரம் பிடித்தார் ஆஸி. டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ்

நியூ சவுத் வேல்ஸ்: தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். அது குறித்து சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழிநடத்தி வருகிறார் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் ஆஸ்தான பவுலர்களில் ஒருவர்.

29 வயதான அவர் பேட் கம்மின்ஸ், பிரிட்டிஷ் நாட்டில் பிறந்த 31 வயதான பெக்கி பாஸ்டன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு தங்களது முதல் குழந்தையை இணையர் இருவரும் உலகிற்கு வரவேற்றனர். இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸில் உள்ள பைரான் பே எனும் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கம்மின்ஸ் உடன் கிரிக்கெட் விளையாடி வரும் சக ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டார்கே, ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கம்மின்ஸ், தனது திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x