Published : 30 Jul 2022 01:59 PM
Last Updated : 30 Jul 2022 01:59 PM
நான் பாரம்பரிய செஸ் நாடான அஜர்பைஜான் நாட்டிலிருந்து வந்தவன் என்று அஜர்பைஜான் நாட்டு செஸ் அணியின் கேப்டன் நிஜத் அபசோவ் கூறினார். அவர் மேலும் கூறும்போது, “நான் 2-வது முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளேன். ஏற்கெனவே 2014-ல் புனேவில் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றபோது பங்கேற்க நான் வந்திருந்தேன்.
சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரங்களில் ஒன்று. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அஜர்பைஜான் நாடு செஸ் விளையாட்டை போற்றும் நாடு. செஸ் விளையாட்டுக்கு அங்கு பெரும் பாரம்பரியம் உள்ளது. கேரி காஸ்பரோவ், ஷாக்ரியார் மாமெடியரோவ், ரட்ஜபோவ், உகார் கஷிமோவ் உள்ளிட்டோர் அஜர்பைஜானை சேர்ந்தவர்கள்.
இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் செஸ் எங்கள் நாட்டில் எவ்வளவு வேரூன்றி இருக்கிறது என்று. எங்கள் நாட்டிலிருந்து ஏராளமான உலகத் தரத்திலான செஸ் வீரர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT