Published : 27 Jul 2022 10:50 PM
Last Updated : 27 Jul 2022 10:50 PM
ஆண்டுக்கு இரண்டு ஐபிஎல் சீசன்கள் நடக்கலாம் என கணித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் இது சாத்தியம் ஆகலாம் என தெரிவித்துள்ளார் அவர்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் உலக அளவில் நடத்தப்படும் விளையாட்டு தொடர்களில் அதிக வருமானம் ஈட்டும் டாப் ஐந்து விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான மோகம் கூடிக் கொண்டே உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலத்தை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்நிலையில், ஒரே ஆண்டில் இரண்டு ஐபிஎல் சீசன்கள் நடக்கலாம் என கணித்துள்ளார் ரவி சாஸ்திரி.
“வரும் நாட்களில் ஒரே ஆண்டில் இரண்டு ஐபிஎல் சீசன்கள் நடைபெறும் என நான் நினைக்கிறேன். அதனால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் இது சாத்தியம் ஆகும். வழக்கமான ஐபிஎல் சீசன் ஆண்டின் முதல் பாதியில் நடக்கும்.
அடுத்த சீசன் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் உலகக் கோப்பை தொடரை போல நாக்-அவுட் முறையில் நடக்கலாம். வரும் நாட்களில் 10 அணிகளின் எண்ணிக்கை 12-ஆக கூடலாம். அதனால் ஒன்னரை மாதம் நடைபெறும் தொடர் இரண்டு மாதங்களாக மாற்றப்படலாம். இதற்கெல்லாம் காரணம் அதற்கான தேவை உள்ளதால்தான்” என தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT