Published : 27 Jul 2022 09:25 PM
Last Updated : 27 Jul 2022 09:25 PM
புதுடெல்லி: காமன்வெல்த் போட்டிகள் 2022-க்கான தொடக்க விழாவில் இந்திய அணியை நாட்டின் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி பி.வி.சிந்து வழிநடத்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய அணி அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். நாளை முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த விளையாட்டு நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த சுமார் 215 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 16 விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகி உள்ளார்.
இந்த நிலையில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியக் கொடியை ஏந்தியபடி அணியை வழி நடத்தி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Two-time Olympic medalist @Pvsindhu1 been named #TeamIndia's Flagbearer for the Birmingham 2022 Commonwealth Games
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT