Published : 29 Sep 2016 03:51 PM
Last Updated : 29 Sep 2016 03:51 PM

டி.ஆர்.எஸ். முறைக்கு உடன்படாமல் நடுவர் தீர்ப்புகளை குறை கூறக்கூடாது: கோலி

எதிர்காலத்தில் நிச்சயம் நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) முறையை பயன்படுத்துவோம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது முந்தைய கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது (பிடி)வாதத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதே.

“இது குறித்து இங்கு உட்கார்ந்து கொண்டு நான் எதுவும் கூற முடியாது, ஆனால் டி.ஆர்.எஸ். குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இதில் சில பகுதிகளை விவாதிக்கலாம். குறிப்பாக பந்தின் தடம் காணும் தொழில் நுட்பம் மற்றும் ஹாக் ஐ ஆகியவை குறித்து விவாதித்து முடிவுக்கு வரலாம். ஆனால் மொத்தமாக நான் என்ன நினைக்கிறேன் என்றால் இவற்றையெல்லாம் நாம் விவாதித்து ஒரு முடிவு எடுக்க முடியும் என்பதே.

தவறான நடுவர் தீர்ப்பு குறித்து நாம் கடுமையாகப் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் டி.ஆர்.எஸ். தேவையில்லை என்று நாம் முடிவெடுத்துள்ளோம். எனவே நடுவர் தீர்ப்பு எங்களுக்கு எதிராக திரும்பிவிட்டது என்பதெல்லாம் தர்க்கபூர்வமானவை அல்ல. இதில் சாக்குபோக்குகளுக்கு இடமில்லை. நாமும் டி.ஆர்.எஸ். பயன்படுத்தத் தொடங்கி விட்டால் அதில் உள்ள பிரச்சினைகளை பேசித்தீர்க்கலாம். நிச்சயம் இது குறித்து யோசிப்போம். அதனால்தான் நான் இங்கு உட்கார்ந்து கொண்டு எதுவும் கூற முடியாது என்று. இவை விவாதிக்கப்பட்ட விஷயங்களே” என்றார் விராட் கோலி.

டி.ஆர்.எஸ். கூடாது என்ற பிடிவாதத்தினால் கோலி கேப்டன்சியில் ஆடி வெற்றிக்கு அருகில் அபாரமாக துரத்தி வந்து கைவிட்ட அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண், அஜிங்கிய ரஹானே டி.ஆர்.எஸ் இருந்திருந்தால் நாட் அவுட் என்று தீர்ப்பாகியிருக்கும். அதே போல் 2015 கால்லே டெஸ்ட் போட்டியில் இலங்கை மீண்டெழுந்தது. அப்போது டி.ஆர்.எஸ். பயன்படுத்தியிருந்தால் சண்டிமால், திரிமானி இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியிருப்பார்கள்.

இந்நிலையில் கோலியிடமிருந்து தன்னம்பிக்கையின் கீற்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x