Published : 06 Jul 2022 08:08 PM
Last Updated : 06 Jul 2022 08:08 PM
மும்பை: ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரபோவதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து உடனான தொடர் முடிந்த கையோடு மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
வரும் 22 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரையில் அங்கு இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்காக ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, கோலி, பும்ரா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கோலி ரன் சேர்க்க சமீப போட்டிகளில் திணறி வருகிறார். ரோகித் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு தொடர்ந்து கேப்டன்கள் மாற்றபடுவது குறித்தும் ரசிகர்கள் தங்களது கருத்தை காட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூத்த வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓய்வு அளிப்பதால் யாரும் ஃபார்முக்கு வரப்போவதில்லை" என் பதிவிட்டிருக்கிறார்.
No one comes back to form while resting…
— Irfan Pathan (@IrfanPathan) July 6, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT