Published : 03 Jul 2022 11:45 PM
Last Updated : 03 Jul 2022 11:45 PM
லண்டன்: நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் கொண்டாடப்பட்ட சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றிருந்தார். அந்த விழாவிற்கு அவர் வருகை தரும் படத்தை 'வாத்தி கம்மிங்' என கேப்ஷன் போட்டு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது விம்பிள்டன்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். இங்கிலாந்து நாட்டில் ஆண்டுதோறும் இந்த விளையாட்டு தொடர் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த 1877 முதல் விம்பிள்டன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர். 40 வயதான அவர் 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளார். அவர் நடப்பு தொடரில் பங்கேற்கவில்லை. வரும் செப்டம்பர் வாக்கில் அவர் விளையாட களம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் வருகை தந்த புகைப்படத்தை 'வாத்தி கம்மிங்' என கேப்ஷன் போட்டு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது விம்பிள்டன். இப்போது அது இணையவெளியில் கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் தான் 'வாத்தி கம்மிங்'. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இந்த பாடல் மிகவும் பிரபலம். கடந்த சில ஐபிஎல் சீசனுக்கு முன்னர் வீரர்கள் இந்த பாட்டுக்கு நடனமாடி இருந்தனர். இப்போது விம்பிள்டன் வரை இந்த பாடல் சென்று சேர்ந்துள்ளது. இந்த பாடலின் வீடியோ வடிவம் யூடியூப் தளத்தில் 37 கோடிகள் பார்வையை கடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment