Published : 01 Jul 2022 07:47 PM
Last Updated : 01 Jul 2022 07:47 PM

'நீரும் நெருப்பும்' | வெடிச்சிரிப்பு கோலியும் புன்னகை ஆண்டர்சனும்: வைரலான ஐசிசி பகிர்ந்த போட்டோ

துபாய்: எதிரெதிர் துருவங்களான விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் புன்னகைத்து நிற்கும் படத்தை பகிர்ந்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இப்போது அது இணைய வெளியில் வைரலாகி உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 28 ஓவர்கள் முடிவில் வெறும் 98 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்திய அணி. இந்நிலையில், கிரிக்கெட் உலகில் பிரதான போட்டியாளர்களாக இருப்பவர்கள் கோலி மற்றும் ஆண்டர்சன்.

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. கோலி தடுமாறினால் ஆண்டர்சனும், ஆண்டர்சன் தடுமாறினால் கோலியும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்தப் போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் வீசிய 681 பந்துகளை கோலி எதிர்கொண்டுள்ளார். அதன் மூலம் 297 ரன்கள் சேர்த்துள்ளார் அவர். மறுபக்கம் 7 முறை கோலியை அவுட் செய்துள்ளார் ஆண்டர்சன்.

இந்நிலையில், எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் உணவு நேர இடைவேளையின்போது கோலியும், ஆண்டர்சனும் பரஸ்பரம் கூடி பேசி சிரிக்கும் படத்தை பகிர்ந்தது ஐசிசி. அதோடு அதற்கு கேப்ஷன் கொடுக்குமாறு சொல்லி இருந்தது. இப்போது அது தான் இணைய வெளியில் வைரலாகி உள்ளது. ஐசிசி பற்ற வைத்த நெருப்புக்கு சமூக வலைதள பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட் மூலம் சொல்லி வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்தப் போட்டியில் கோலி 19 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இன்சைட் எட்ஜ் முறையில் தனது விக்கெட்டை இங்கிலாந்து பவுலர் பாட்ஸ் வசம் பறிகொடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x