Published : 24 Jun 2022 07:57 PM
Last Updated : 24 Jun 2022 07:57 PM
ஹெட்டிங்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக மூன்று சதங்களை பதிவு செய்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டேரில் மிட்செல். நியூசிலாந்து அணி இந்தத் தொடரில் தடுமாறியபோதும் தடம் மாறாமல் விளையாடி வருகிறார் மிட்செல்.
நியூசிலாந்து அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. தற்போது மூன்றாவது போட்டி ஹெட்டிங்லியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 123 ரன்கள் எடுப்பதற்குள் டாப் 5 பேட்ஸ்மேன்களை இழந்தது அந்த அணி.
இருந்தும் தனது அபார ஆட்டத்தின் மூலம் தன் அணிக்கு பலம் கொடுத்தார் மிட்செல். ப்ளண்டெல் உடன் 120 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதோடு சவுதி உடன் இணைந்து 60 ரன்களும், நிக்கோலஸ் உடன் இணைந்து 40 ரன்களும் எடுத்திருந்தார் அவர். அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 228 பந்துகளை எதிர்கொண்டு 108 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இந்தத் தொடரில் அவர் பதிவு செய்யும் மூன்றாவது டெஸ்ட் சதம் இது. இதற்கு முன்னதாக டிரெண்ட் பிரிட்ஜில் 190 ரன்களும் (முதல் இன்னிங்ஸ்), லார்ஸ் மைதானத்தில் 108 ரன்களும் அவர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலும் சதம் பதிவு செய்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் பாரிங்டன் (1967-இல் பாகிஸ்தானுக்கு எதிராக) மற்றும் கிரஹாம் கூச் (1990-இல் இந்தியாவுக்கு எதிராக) இந்தச் சாதனையை படைத்திருந்தனர்.
அவர் படைத்துள்ள சாதனை குறித்து அறிந்த ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் அவரை புகழ்ந்து வருகின்றனர். 'ஏனப்பா யாரவது அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் கடினமானது என சொல்லுங்களேன்' என ஒருவர் ட்வீட் செய்துள்ளார். மிகவும் சுலபமாக இங்கிலாந்து பந்து வீச்சை ஹேண்டில் செய்து வருகிறார் அவர். கடந்த 2021 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வெளியேற்றியதும் மிட்செல் தான்.
Lord's, Trent Bridge, Headingley. @dazmitchell47, the first New Zealander to score three consecutive Test hundreds against England #ENGvNZ pic.twitter.com/uF2tRcUS72
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT