Published : 13 Jun 2022 03:36 PM
Last Updated : 13 Jun 2022 03:36 PM
சென்னை: கடந்த 17 மாதங்களில் 10 டெஸ்ட் சதங்களை பதிவு செய்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். இதே காலகட்டத்தில் ஒரே ஒரு சதம் கூட பதிவு செய்யாமல் உள்ளனர் ஸ்மித், விராட் கோலி மற்றும் வில்லியம்சன்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் FAB4 வீரர்களாக அறியப்படுகிறார்கள் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட். இதில் கடந்த 2021 ஜனவரி 13-க்கு பிறகு ஜோ ரூட் நீங்கலாக மற்ற மூவரும் இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட பதிவு செய்யவில்லை. இந்த 17 மாதங்களில் 10 டெஸ்ட் சதங்களை பதிவு செய்துள்ளார் ரூட். 42 இன்னிங்ஸ் விளையாடி 2,355 ரன்கள் குவித்துள்ளார் அவர்.
இதே காலகட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி 24 இன்னிங்ஸ் விளையாடி 725 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 அரை சதம் அடங்கும். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ஸ்மித் பதிவு செய்துள்ள 27 சதங்கள் என்ற கணக்கையும் ரூட் சமன் செய்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27-வது சதத்தை பதிவு செய்தார்.
விராட் கோலி, கடந்த 2019 நவம்பர் வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்தார். அதன் பிறகு இதுவரையில் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் கோலி சதம் பதிவு செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT