Published : 04 May 2016 03:34 PM
Last Updated : 04 May 2016 03:34 PM

டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்துக்கு சரிவு; பாக். அணி 3-வது இடம்

ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி 6-வது இடத்துக்கு சரிய பாகிஸ்தான் அணி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா 112 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவின் வீழ்ச்சியினால் நன்மை பெற்ற இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் முறையே 4 மற்றும் 5-ம் இடத்தில் உள்ளன. மே.இ.தீவுகள் அணி 8-ம் இடத்தை தக்கவைத்தாலும் கடைசியில் உள்ள வங்கதேச அணியைக் காட்டிலும் 8 புள்ளிகளே அதிகம் பெற்றுள்ளது.

2014-15 டெஸ்ட் முடிவுகளே இதில் பெரும்பான்மை வகித்ததால் 2012-2013-ல் தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக வென்ற டெஸ்ட் தொடர்கள் இதில் தாக்கம் செலுத்தவில்லை. 2015-16 சீசனில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து வங்கதேசத்துடன் டிரா செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2012-13 சீசனில் நியூசிலாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வேயை வென்றது ஆனால் 2015-16 சீசனில் ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது.

இந்த சமீபத்திய கணக்கீடுகளின் படி வங்கதேச அணி அதிகபட்சமாக 10 புள்ளிகள் உயர்வு கண்டது, இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகள் உயர்வு பெற்றது.

ஜிம்பாப்வே அணி 12 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்றாலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அந்த அணியின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தரவரிசைக் கணக்கீட்டுக் காலக்கட்டத்தில் குறைந்தது 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும், ஆனால் ஜிம்பாப்வே அணி விளையாடவில்லை இதனால் அந்த அணி பட்டியலில் இடம்பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x