Published : 06 Jun 2022 10:30 PM
Last Updated : 06 Jun 2022 10:30 PM
மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை தான் கடந்த தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது போல இருந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடியவர் கவாஸ்கர். 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,122 ரன்களை எடுத்துள்ளார் அவர். இதில் 34 சதம் மற்றும் 45 அரை சதங்கள் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 51.12. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முதலில் 10,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்தார். அதன் பிறகு இதுவரையில் இந்த மைல்கல்லை 14 வீரர்கள் எட்டினர். அதில் நேற்று இணைந்தது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.
இந்நிலையில், 10000 ரன்கள் கடந்த தருணத்தில் தனது எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்பது குறித்து பகிர்ந்துள்ளார் கவாஸ்கர். "அதனை ஒரு மாயம் போல நான் உணர்ந்தேன். ஏனெனில் அதற்கு முன்னர் அந்த ஐந்து இலக்க எண்களை யாருமே எட்டியது கிடையாது. அதனால் அது ஏதோ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதை போல இருந்தது. முதல் முறை என்பதால் அப்படி ஒரு உணர்வு. அந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது அணியின் கேப்டன் கபில் தேவ். அணியினருடன் இணைந்து அதை நாங்கள் கொண்டாடினோம்" என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
அவருக்கு பிறகு சச்சின் (15921 ரன்கள்) மற்றும் டிராவிட் (13288 ரன்கள்) என இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்துள்ளனர்.
RARE VIDEO
Sunil Gavaskar scored his 10000th run in the Ahmedabad Test when he played a late-cut off Ijaz Fakih in 1987.
Gavaskar became the first cricketer to scale the Mount Everest — 10000 Test runs
Courtesy: @Zohaib1981 pic.twitter.com/c8Vqd2tla8— Sarang Bhalerao (@bhaleraosarang) February 19, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT