Published : 22 May 2022 11:06 PM
Last Updated : 22 May 2022 11:06 PM
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட மீண்டும் தேர்வாகியுள்ளார் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் அவர்.
கடந்த 2004 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். இதுவரை 26 டெஸ்ட், 32 டி20 மற்றும் 94 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி தான் அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியாகும். அதன் பிறகு அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக சிறந்த பினிஷராக ஜொலித்து வருகிறார் தினேஷ் கார்த்திக். அதன் காரணமாக 36 வயதான அவர் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாட மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுகிறார்.
இத்தகைய சூழலில் தனது ரீ-என்ட்ரி குறித்து ட்வீட் செய்துள்ளார் தினேஷ் கார்த்திக். "உங்களை நீங்கள் நம்பினால். அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்" என ட்வீட் செய்துள்ளார். அவரை இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">If you believe yourself, everything will fall into place! ✨<br>Thank you for all the support and belief...the hard work continues... <a href="https://t.co/YlnaH9YHW1">pic.twitter.com/YlnaH9YHW1</a></p>— DK (@DineshKarthik) <a href="https://twitter.com/DineshKarthik/status/1528402551309094912?ref_src=twsrc%5Etfw">May 22, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT