Published : 22 May 2022 10:38 PM
Last Updated : 22 May 2022 10:38 PM
மும்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்த அணியில் ராகுல் திரிபாதி இடம் பெறவில்லை. அதனை அறிந்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளத்திலும் வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. வரும் ஜூன் 9 முதல் 19-ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் சிலர் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்கள் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக இந்த தொடரில் அறிமுக வீரர்களாக ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 413 ரன்களை எடுத்துள்ள ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 31 வயதான அவர் கடந்த 2010 முதல் மகாராஷ்டிரா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 2017 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது கேள்விக்குறியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்குவது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாய்ப்பு வழங்காததை அறிந்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
'ராகுல் திரிபாதி எங்கே?', 'ராகுல் திரிபாதி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவில்லை. இதனால் இந்தியாவுக்கு தான் இழப்பு', 'அணியில் தேர்வு செய்ய தகுதி வாய்ந்தவர் ராகுல் திரிபாதி', 'அவருக்கு அயர்லாந்து பயணத்திற்கான அணியில் வாய்ப்பு கிடைக்கும் நம்புவோம்' என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை பதிவுகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

That would have allowed Rahul Tripathi to make it https://t.co/oJnJWdkagm
— Harsha Bhogle (@bhogleharsha) May 22, 2022

If Rahul Tripathi doesn't play for India, it's our own loss.
— Aditya (@Adityakrsaha) May 17, 2022

Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT