Published : 19 May 2022 04:24 PM
Last Updated : 19 May 2022 04:24 PM

மாரடைப்பால் ரிங்கிற்குள் சரிந்து விழுந்த குத்துச்சண்டை வீரர் மூசா யமக் உயிரிழப்பு

முனிச்: குத்துச்சண்டை போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த மூசா யமக் (Musa Yamak) என்ற வீரர் மாரடைப்பு காரணமாக ரிங்கிற்குள் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவரது மரணம் விளையாட்டு உலகை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

தொழில்முறை குத்துச்சண்டை வீரரான மூசா யமக், துருக்கி நாட்டில் பிறந்தவர். அவருக்கு வயது 38. இதுவரையில் அவர் விளையாடிய 75 தொழில்முறை சார்ந்த குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியைத் தழுவியது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-இல் தான் அவர் இந்த விளையாட்டை விளையாட தொடங்கியுள்ளார். ஜெர்மனியில் வசித்து வந்துள்ளார் மூசா. 2021 வாக்கில் WBF பட்டத்தை வென்ற பிறகு உலக அளவில் பிரபலமானவராக அறியப்படுகிறார் அவர்.

கடந்த சனிக்கிழமை அன்று உகாண்டா வீரர் ஹம்ஸா வண்டேராவுக்கு (Hamza Wandera) எதிராக விளையாடியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி நேரலையில் ரசிகர்களுக்காக ஒளிபரப்பாகியுள்ளது.

இந்தப் போட்டியின் மூன்றாவது சுற்று தொடங்குவதற்கு முன்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பாக்சிங் ரிங்கிற்குள் நிலைகுலைந்து சரிந்து விழுந்த அவரை போட்டி ஏற்பாட்டாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் அவருக்கு தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x