Published : 12 May 2022 03:41 PM
Last Updated : 12 May 2022 03:41 PM
நியூ ஜெர்சி: உலக அளவில் விளையாட்டு துறையில் அதிக வருமானம் ஈட்டி வரும் டாப் 10 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இந்த பட்டியலில் யார்? யார்? இடம் பெற்றுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.
கரும்பு தின்னக் கூலியா? என நம் ஊர் பக்கங்களில் ஒரு சொலவடை உண்டு. ஆனால் விளையாட்டு துறையில் ஈடுபட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கு தின்னக் கரும்பும் கொடுத்து, அதற்கு கூலியும் கொடுப்பது வழக்கம். அதுவும் அசாதாரண திறன் படைத்த வீரர் என்றால் அவரை உலகமே கொண்டாடி தீர்த்துவிடும். உலக அளவில் விளையாட்டுத்துறை லாபம் கொடுக்கும் ஒரு துறையாகவே உள்ளது. அதற்கு காரணம் ரசிகர்களின் அமோக ஆதரவு. ஸ்பான்சர் தொடங்கி விளம்பரங்கள் வரை அனைத்திலும் இங்கு வருமானம் தான்.
இந்நிலையில், அதிக வருமானம் ஈட்டி வரும் டாப் 10 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ். நடப்பு ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
#1 மெஸ்ஸி - கால்பந்து - அர்ஜென்டினா - 130 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#2 லெப்ரான் ஜேம்ஸ் - கூடைப்பந்து - அமெரிக்கா - 121.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#3 கிறிஸ்டியானோ ரொனால்டோ - கால்பந்து - போர்ச்சுகல் - 115 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#4 நெய்மர் - கால்பந்து - பிரேசில் - 95 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#5 ஸ்டீபன் கர்ரி - கூடைப்பந்து - அமெரிக்கா - 92.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#6 கெவின் டியூரன்ட் - கூடைப்பந்து - அமெரிக்கா - 92.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#7 ரோஜர் ஃபெடரர் - டென்னிஸ் - ஸ்விட்சர்லாந்து - 90.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#8 கனேலோ அல்வாரெஸ் - குத்துச்சண்டை - மெக்சிகோ - 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#9 டாம் பிராடி - அமெரிக்கன் கால்பந்து - அமெரிக்கா - 83.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
#10 ஜியானிஸ் ஆன்டிடோகூம்போ - கூடைப்பந்து - கிரீஸ் - 80.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் சிலர் களத்திற்கு வெளியில் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். சிலர் களத்தில் தாங்கள் சார்ந்த விளையாட்டின் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT