Published : 01 May 2022 09:25 PM
Last Updated : 01 May 2022 09:25 PM

IPL 2022 | ருதுராஜ் - கான்வே அசத்தல் பேட்டிங்; 202 ரன்களை குவித்தது சிஎஸ்கே

புனே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 202 ரன்களை குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 46-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்த போட்டி முதல் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ளார் தோனி. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்தார். சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

நடராஜன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், மார்க்கோ ஜான்சன் என ஹைதராபாத் அணியின் பவுலர்களின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். ருதுராஜ் 99 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த தோனி 8 ரன்களில் அவுட்டானார். கான்வே இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 55 பந்துகளில் 85 ரன்களை எடுத்திருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கேப்டனாக தோனியின் வரவு இந்த போட்டியில் சென்னைக்கு நல்வரவாக அமைந்துள்ளது. நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற ஹைதராபாத் அணி 203 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x