Published : 27 Apr 2022 11:31 PM
Last Updated : 27 Apr 2022 11:31 PM

IPL 2022 | ரஷீத்தின் கடைசி ஓவர் சிக்ஸர்கள் - ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி

மும்பை: சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

196 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. சுப்மன் கில் கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரின் பார்ம் அவுட் இன்றும் தொடர்ந்தது. எனினும், முந்தையை போட்டிகளைவிட இன்று சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 7வது ஓவர் வரை நீடித்ததுடன், கில் மற்றும் சஹா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர். 22 ரன்கள் எடுத்திருந்த கில், உம்ரான் மாலிக் பந்தில் கிளீன் போலடாக்கி முதல் விக்கெட்டாக நடையை கட்டினார்.

இதன்பின் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆரம்பமே அதிரடியாக துவங்கினாலும், அந்த மொமண்டத்தை அப்படியே கடத்த தவறினார். 10 ரன்களில் அவர் வெளியேற, அடுத்த வந்த டேவிட் மில்லரும் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த ஒப்பனர் விருத்திமான் சஹா 68 ரன்களுக்கு அவுட் ஆக, கடைசி கட்டத்தில் 6 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை மார்கோ ஜேன்சன் வீசினார். அவரின் முதல் பந்தில் ராகுல் தெவட்டியா ஒரு சிக்ஸும், அடுத்த பந்தில் ஒரு சிங்கிளும் எடுத்தார். ஸ்ட்ரைக்கில் வந்த ரஷீத் கான் மூன்றாவது பந்தை சிக்ஸ் அடிக்க, 3 பந்துகளுக்கு 9 ரன்களே தேவைப்பட்டது. நான்காவது பந்தை டாட் பாலாக ஜேன்சன் வீச, அடுத்த பந்தை சிக்ஸ் அடித்தார் ரஷீத். கடைசி பந்தும் சிக்ஸ் அடிக்க, கடைசி பந்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸ் அடித்த ரஷீத் 11 பந்துகளில் 31 ரன்களும், தெவட்டியா 40 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பங்களித்தனர்.

உம்ரான் மாலிக் வேகத்தில் குஜராத் அணி சரிந்தது எனலாம். அவர் மட்டுமே ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இதில் நான்கு விக்கெட்டுகள் கிளீன் போலடாகின. ஒரு விக்கெட் மட்டுமே கேட்ச் மூலம் வந்தது. ஆனால் அவரின் இந்த உழைப்பு கடைசி ஓவரில் ரஷீத் கானின் சிக்ஸர்களால் தவிடுபொடியானது.

சன்ரைசர்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணிக்கு அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் இணை துவக்கம் கொடுத்தது. 2-வது ஓவரில் இந்த இணையை முஹம்மது ஷமி பிரித்தார். 5ரன்களை சேர்த்திருந்த கேன் வில்லியம்சன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்த 5-வது ஓவரிலேயே ராகுல் திரிபாதியும் 16 ரன்களில் நடையைக் கட்டினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் 65 ரன்களை குவித்த அபிஷேக் சர்மா அல்சாரி ஜோசப் பந்தில் போல்டானார். எய்டன் மார்க்ராம் 56 ரன்களும், நிகோலஸ் பூரான் 3 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது குஜரானத் டைட்டன்ஸ்.

சன்ரைசர்ஸ் அணி தரப்பில் முஹம்மது ஷமி 3 விக்கெட்டுகளையும், யஷ் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x