ஆசிய விளையாட்டு அழைப்பை ஏற்க மறுத்தது ஆஸ்திரேலியா

ஆசிய விளையாட்டு அழைப்பை ஏற்க மறுத்தது ஆஸ்திரேலியா
Updated on
1 min read

ஹாங்சோ: சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான அழைப்பை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகள் ஏற்க மறுத்துள்ளன.

சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் செப்டம்பர் 10 முதல் 25-ம் தேதி ஆசிய விளையாட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட ஓசியானியா நாடுகளில் இருந்து சுமார் 300 விளையாட்டு வீரர்கள் மற்றும் 150 பயிற்சியாளர்களுக்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த அழைப்பை ஆஸ்திரேலியா ஏற்க மறுத்துள்ளது. ஏனெனில் விளையாட்டுக் கூட்டமைப்புகள் எதுவும் ஹாங்சோவுக்குச் செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதேபோன்று நியூஸிலாந்தும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கப்போவது இல்லை என்று கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in