Published : 23 Apr 2022 03:17 PM
Last Updated : 23 Apr 2022 03:17 PM
புனே: கிரிக்கெட் உலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார் பேட்டிங் ஆல்-ரவுண்டரான முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கேதார் ஜாதவ். இவர் 2018 முதல் 2020 ஐபிஎல் சீசன் வரையில் சிஎஸ்கே அணியில் விளையாடி இருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 37 வயதான கேதார் ஜாதவ். 2014 முதல் 2020 வரையில் இந்திய அணியில் விளையாடியவர் 2019 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடி இருந்தார். 2021 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தார். நடப்பு சீசனில் அவரை எந்தவொரு அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. இந்நிலையில், அவர் கிரிக்கெட் உலகில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார் .
தனது சொந்த ஊரான புனே நகரில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார் ஜாதவ். இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அவர். இந்த முயற்சியை திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.
"புனித் பாலன் - கேதார் ஜாதவ் கிரிக்கெட் அகாடமி தொடங்கி உள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என துடிக்கும் வீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு சாதகமான சூழலையும், சிறந்த வசதிகளையும் ஏற்படுத்துவோம். இதன் மூலம் பல்வேறு பார்மெட் கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிருக்கு வாய்ப்புகள் அமைத்துக் கொடுப்போம்" என தெரிவித்துள்ள ஜாதவ்.
கடந்த 2021ல் தனி ஒருவராக தனது பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியிருந்தார் ஜாதவ். இப்போது வணிக நோக்கில் கார்ப்பரேட் உடன் கைகோர்த்துள்ளார் அவர். இதில் திறன் படைத்த வீரர்களுக்கும், எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளார் ஜாதவ்.
Happy to announce the launch of Punit Balan - Kedar Jadhav cricket academy today
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT