Published : 23 Apr 2022 03:02 AM
Last Updated : 23 Apr 2022 03:02 AM

'இது கிரிக்கெட், கால்பந்து அல்ல' - ரிஷப் பந்த் செயலால் டென்ஷனான கெவின் பீட்டர்சன்

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த்தின் செயல்பாட்டை முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று இரவு நடந்த ஐபிஎல் 15-வது சீசனின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் போது டெல்லி அணி வெற்றிபெற 6 பந்துகளுக்கு 36 ரன்கள் அதாவது 6 சிக்ஸர்கள் தேவைப்பட்டது. மெக்காய் வீசிய முதல் 2 பந்துகளையும் ரோவ்மன் பவல் சிக்ஸ் அடிக்க ஆட்டத்தில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதன்பின் மூன்றாவது பந்தை மெக்காய் புல்டாஸாக வீச, அதையும் பவல் சிக்ஸ் அடிப்பார். ஆனால் அந்த புல்டாஸ் இடுப்புக்கு மேல் வந்தது எனக் கூறி நோ பால் கேட்டு டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் சலசலப்பை ஏற்படுத்தினர். நோ பால் அறிவிக்கவில்லை என்றதும் ஒருகட்டத்தில் ரோவ்மன் பவலையும், குல்தீப் யாதவ்வையும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு பெவிலியனுக்கு அழைத்தார் ரிஷப். சிறிதுநேரத்தில் பயிற்சியாளர் ஒருவரை மைதானத்துக்குள் அனுப்பி அம்பயரிடம் விவாதமும் செய்தார். அதேபோல், ஜாஸ் பட்லரிடம் ரிஷப் விவாதத்தில் ஈடுபட்டதால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம், ரிஷப் களத்தில் வெளிப்படுத்திய செயலை இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடுமையாக சாடியுள்ளார். வர்ணனையாளராக இருக்கும் கெவின், "இது கிரிக்கெட், கால்பந்து அல்ல. ரிக்கி பாண்டிங் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்க விடமாட்டார் என நினைக்கிறேன். பயிற்சியாளரை மைதானத்துக்கு அனுப்பி விவாதம் செய்கிறார்கள். ரிஷப்பின் இந்த செயல் சரியான நடத்தை கிடையாது. நாம் ஜென்ட்டில்மேன் விளையாட்டை விளையாடுகிறோம் என்பதை நியாபகப்படுத்தி கொண்டால் நல்லது" என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x