Published : 21 Apr 2022 01:14 PM
Last Updated : 21 Apr 2022 01:14 PM

மத்தியப் பிரதேச அரசிடம் உதவி கோரும் ஸ்பெஷல் ஒலிம்பிக் வீராங்கனை சீதா சாகு

ரேவா: ஸ்பெஷல் ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வென்ற வீராங்கனை சீதா சாகு (Sita Sahu) தனது வாழ்வாதாரத்திற்காக மத்தியப் பிரதேச மாநில அரசிடம் உதவி கோரியுள்ளார். இவர், கடந்த 2011ல் ஏதென்ஸ் ஸ்பெஷல் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவர்.

'ஸ்பெஷல் ஒலிம்பிக்' என்பது, குறிப்பிட்ட சில வகையான மூளைத்திறன் சவால் கொண்ட குழந்தைகள், பெரியவர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் சர்வதேச விளையாட்டுப் போட்டியாகும். இந்தப் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற சீதா சாகு, தற்போது தனது வாழ்வாதாரத்திற்காக தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார் .

குடும்பச் சூழல் காரணமாக இப்போது இந்தப் பணியை அவர் செய்து வருகிறார். அதனை அவர் வசித்து வரும் ஊரே அறியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

2011ல் அவர் பதக்கம் வென்ற போது பலரும் பாராட்டு தெரிவித்ததாகவும். 2013ல் அப்போதைய காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் வீடு மற்றும் கடை ஒன்றும் தருவதாக சொல்லியுள்ளார். ஆனால் அதில் தங்களுக்கு 5 லட்ச ரூபாய் மட்டுமே வந்ததாகவும் தெரிவித்துள்ளார் சீதாவின் தாயார்.

அண்மையில் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது சீதாவின் கடையும் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்தே சீதா, மத்தியப் பிரதேச அரசிடம் உதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.

"நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் வீடு மற்றும் கடை தருவதாக அரசு உறுதியளித்தது. ஆனால் இதுவரை எனக்கு அது கிடைக்கவில்லை. அதனால் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானிடம் நான் இதை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். எங்களுக்கு வீடு வேண்டும். அதோடு நகராட்சி அகற்றிய கடையும் வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார் சீதா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x