Published : 23 Apr 2016 03:36 PM
Last Updated : 23 Apr 2016 03:36 PM

தன்னலமற்ற வீரர் டிவில்லியர்ஸ்: விராட் கோலி புகழாரம்

புனே அணியை வீழ்த்தியதில் டிவில்லியர்ஸின் ஆட்டம் நேற்று பிரதான பங்கு வகித்ததையடுத்து ஆர்சிபி கேப்டன் விராட் கோலி அவரை புகழ்ந்துரைத்துள்ளார்.

“ஒரு நேரத்தில் இருந்த நிலையை விட இந்தப் போட்டி நாங்கள் நினைத்ததை விட நெருக்கமாக அமைந்தது, ஆனால் கடைசியில் வெற்றி பெற்றது நல்லது.

நாங்கள் ஒரு அணியாக நல்ல கிரிக்கெட்டை ஆடி வருகிறோம், சரியான தருணங்களில் கொஞ்சம் நிதானித்து செல்லும் தன்மை தேவை.

அடுத்த முறை நான் டாஸில் வெல்வேன் என்று நினைக்கிறேன். வாட்சன் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார், கேன் வில்லியம்சன் சிறந்த முறையில் முடித்து வைத்தார். அவர்கள் பதற்றமடையாமல் இருந்தது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் 175-180 ரன்கள் என்று பேசிவந்தோம். ஆனால் எனது பேட்டிங் திருப்திகரமாக அமையவில்லை. 30-35 பந்துகளுக்குப் பிறகே நான் பேட் செய்த விதம் சரியாக இல்லை, ஆனால் நான் டிவில்லியர்சுக்கு உறுதுணையாக ஆடுவது என்பதை தீர்மானித்தேன்.

அவர்தான் என்னை ஒரு முனையை தக்க வைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் ஷாட்களை இஷ்டப்படி ஆட பிட்சில் வேகம் அதிகமில்லை. எங்கள் தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ். அவருடன் இணைந்து ஆடுவது ஒரு மகிச்சி தரும் அனுபவம். அவர் தொடர்புபடுத்தும் முறை, அவர் ஆடும் விதம் ஆகியவை அவரை ஒரு தன்னலமற்ற மனிதர் என்பதை அறிவுறுத்துகிறது.

அவர் தன்னுடைய திட்டம் குறித்துக் கூட கவலைப்படுவதில்லை தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை விட சிறந்த மனிதர் என்றே கூற வேண்டும்”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x