Published : 26 Mar 2022 02:52 PM
Last Updated : 26 Mar 2022 02:52 PM
2007-ம் ஆண்டு... யாராலும் மறக்க முடியாத ஆண்டு, கிரிக்கெட் உலகின் புது அத்தியாயம் இயற்றப்பட்ட ஆண்டு. ஆம், 2007-ம் ஆண்டு, முதல் 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் புது அத்தியாயமே. 8 மணி நேரம் நடைபெறும் போட்டியை கண்ட முதியவர்களுக்கு அன்று 4 மணி நேரத்தில் போட்டி முடிந்து விடுவது மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர கொடுத்திருக்கலாம்.
அவர்களின் அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், முதல் டி20 உலகக் கோப்பையும் இந்தியா வென்றது. இந்தியா முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது. அப்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் தெரியாது, இது எவ்வளவு பெரிய சந்தையை ஏற்படுத்த போகிறது என்பது.
இந்தியாவை பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு அணிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அப்போது மக்கள் மற்றும் ரசிகரிகளிடம் பெரிதும் ஏற்பட்டது. அதற்கு காரணம் மூத்த வீரர்கள் பலர் அணியில் காலம் காலமாக விளையாடியதே. இளம் வீரர்களை சோதனை செய்து பார்ப்பதில்கூட இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அச்சம். அந்த அச்சத்தை மறைத்து மூத்த வீரர்கள் இல்லாமல் முதல்முறையாக இந்திய கிரிக்கெட் கவுன்சில் தோனி தலைமையில் அணியை உருவாக்கியது. அப்படி உருவான இளம் வீரர்கள் அடங்கிய அணியை கொண்டு இந்திய கேப்டனாக தோனி பெற்று தந்த உலகக் கோப்பை அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.
இதன் அடித்தளமாக கொண்டு அடுத்த ஆண்டே, அதாவது 2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உருவானது. இந்தியாவில் உள்ள மாநிலங்களை பிரதிநிதித்துவப்படும் அணிகளாக அந்தந்த மாநில வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்படி தொடங்கப்பட்ட போட்டி, தற்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாவாக மாறிஇருக்கிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, ரவி அஸ்வின் என எண்ணற்ற வீரர்கள் ஐபிஎல் வந்தபிறகு இந்திய அணிக்கு பிற்காலத்தில் தூண்களாக அமைந்தனர்.
ஐபிஎல் போட்டியால் கிரிக்கெட் உலகில் இந்திய அணி தனித்துவத்துடன் திகழ்கிறது என கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட உண்மை. அந்த ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே சென்னை கொல்கத்தா அணிகளிடையே பலப்பரீட்சை நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை கோப்பை வென்றது என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாம் இருக்கும் என்ற ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT