Published : 07 Jun 2014 11:00 AM
Last Updated : 07 Jun 2014 11:00 AM

கால்பந்து தரவரிசை ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கால்பந்து தரவரிசையில் உலக சாம்பியன் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா) புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஸ்பெயின் 1,485 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜெர்மனி அணி 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 1300 புள்ளிகள் பெற்றுள்ளது. 3-வது இடத்தில் இருந்த போர்ச்சுகல் ஓரிடம் பின்தங்கி 4-வது இடத்துக்கு வந்துள்ளது. இதுவரை 4-வது இடத்தில் இருந்த பிரேசில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரேசிலில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.

ஆர்ஜெண்டீனா 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு வந்துள்ளது. ஸ்விட்சர்லாந்து அணியும் இரு இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளது.உருகுவே அணி 7-வது இடத்தில் உள்ளது. கொலம்பியா 3 இடங்கள் பின்தங்கி 8-வது இடம் பிடித்துள்ளது. இத்தாலிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து ஓரிடம் முன்னேறி 10-வது அணியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x