Published : 11 Mar 2022 10:08 PM
Last Updated : 11 Mar 2022 10:08 PM

'இறுதிசடங்கில் 100% கலந்துகொள்வேன்' - ஷேன் வார்ன் குறித்து டேவிட் வார்னர் நெகிழ்ச்சி

கராச்சி: ஷேன் வார்ன் இறுதிச்சடங்கில் நூறு சதவீதம் கலந்துகொள்வேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பேட்டியளித்துள்ளார்.

தாய்லாந்தில் இந்த மாதம் 4ம் தேதி சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரின் உடல் ஆஸ்திரேலியா கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நிகழ்வு இந்த மாதம் 30ம் தேதி நடக்கவுள்ளது. வார்னின் மரணம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பல வீரர்கள் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது தொடர்பாக பேசியுள்ளார். பாகிஸ்தான் தொடரில் விளையாடி வரும் வார்னர், இதுதொடர்பாக பேசுகையில், "ஷேன் வார்ன் உயிருடன் இல்லை என்பதை உணர இன்னும் முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன். அவரின் இறுதிசடங்கில் 100% கலந்துகொள்வேன்.

இது நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவார்கள். உலகம் முழுவதிலும் பல நபர்கள் உடன் பழகியவர் வார்ன். சிறுவயதில், நான் அவரது போஸ்டரை வீட்டில் ஒட்டி வைத்திருப்பேன். நான் அவரை போலவே ஆக விரும்பியே, இந்தத்துறையை தேர்வு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் தனது ரோல் மாடல் ஷேன் வார்ன் தான் என்பதை பலமுறை பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளார். வார்னின் மரணத்தின்போதும் உணர்ச்சிகரமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x