Published : 11 Mar 2022 05:17 PM
Last Updated : 11 Mar 2022 05:17 PM
பெங்களூரு: முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினை 'ஆல் டைம் கிரேட் வீரர்' என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் மொஹாலி மைதானத்தில் நடந்தது. இதில் இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் மிக முக்கிய பங்காற்றியிருந்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் புதிய சாதனை படைத்தார். கபில்தேவின் சாதனையை முறியடித்த அவரை, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வெகுவாக பாராட்டினார்.
ரோஹித் தனது பேட்டியில் "அஸ்வின் இந்தியாவுக்காக நீண்டகாலமாக விளையாடி வருகிறார். பல போட்டியை வென்று கொடுத்துள்ளார். பலர் அவர் குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அஸ்வின் 'ஆல் டைம் கிரேட் வீரர்'" என்று புகழாரம் சூட்டியிருந்தார். பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் இந்தப் பாராட்டு மாறுபட்ட கருத்து தெரிவித்தது பேசு பொருளானது.
இந்நிலையில் அஸ்வின் ரோஹித்தின் பாராட்டு குறித்து, "என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ரோஹித்தின் இந்தப் பாராட்டுக்கு எப்படி நடந்துகொள்வதென தெரியவில்லை என்பதே உண்மை. பாராட்டுக்களைப் பெறுவதில் நான் மிகவும் மோசமாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT