Published : 12 Feb 2022 06:35 PM
Last Updated : 12 Feb 2022 06:35 PM

IPL Auction 2022 | ரூ.14 கோடிக்கு சென்னையில் ஐக்கியமானார் தீபக் சஹார் | முழுப் பட்டியல்

பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நான்கு சுற்றுகளில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள், பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், கீப்பர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் ஐந்தாம் சுற்று ஏலம் வேகப் பந்துவீச்சாளருக்காக தொடங்கியது. ஐந்தாம் சுற்றில் முதல் வீரராக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ரூ.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். கடந்த சீசன்களில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய அவரை மீண்டும் அந்த அணியை தக்கவைத்துக்கொண்டது.

இரண்டாவது வீரராக தீபக் சஹார் ஏலம் விடப்பட்டார். அவருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடிக்கு வாங்கியது. தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக பேட்டிங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்தியதால் அவரை எடுக்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டினார்.

தீபக் சஹாரை போலவே, மற்றொரு இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை ஏலம் எடுப்பதிலும் கடும் போட்டி இருந்தது. கடந்த முறை கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவரை, இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.10 கோடிக்கு வாங்கியது.

நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் ரூ.10 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஜாஷ் ஹேசில்வுட்டை ரூ.7.75 கோடிக்கு வாங்கியது பெங்களூரு அணி. லக்னோ அணி இங்கிலாந்து வீரர் மார்க்வுட்டை ரூ.7.5 கோடிக்கு வாங்கியது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சோபிக்காத புவனேஷ்வர் குமார் ரூ.4.2 கோடிக்கு மீண்டும் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள ஷர்துல் தாகூரை டெல்லி அணி ரூ.10.75 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் ஷர்துல் சென்னை அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை டெல்லி அணி அவரின் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கே வாங்கியது.

முன்னதாக ஐந்தாவது சுற்றில் இந்திய வீரர் உமேஷ் யாதவ்வை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

ஐபிஎல் ஏலம் 2022 - இதுவரை...

> ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.12.25 கோடி (கொல்கத்தா)
> ட்ரென்ட் பவுல்ட் - ரூ.8 கோடி (ராஜஸ்தான்)
> ஷிகர் தவானை ரூ.8.25 கோடி (பஞ்சாப்)
> அஸ்வின் ரூ.5 கோடி (ராஜஸ்தான்)
> ரபாடாவை ரூ.9.25 கோடி (பஞ்சாப் )
> முகமது ஷமி - ரூ.6 கோடி (​குஜராத்)
> டி காக் - ரூ.6.75 கோடி (லக்னோ)
> டு ப்ளேசிஸ் - ரூ.7 கோடி (பெங்களூரு)
> டேவிட் வார்னர் - ரூ.6.25 கோடி (டெல்லி)
> மணிஷ் பாண்டே - ரூ.4.60 கோடி (லக்னோ)
> ஷிம்ரோன் ஹெட்மெய்ர் - ரூ.8.50 கோடி (டெல்லி)
> ராபின் உத்தப்பா - ரூ.2 கோடி (சென்னை)
> ஜேசன் ராய் - ரூ.2 கோடி (குஜராத்)
> தேவ்தூத் படிக்கல் - ரூ.7.75 கோடி (ராஜஸ்தான்)
> ப்ராவோ - ரூ.4.40 கோடி (சென்னை)
> நிதிஷ் ரானா - ரூ.8 கோடி (கொல்கத்தா)
> ஜேசன் ஹோல்டர் - ரூ.8.75 கோடி (லக்னோ)
> ஹர்ஷால் படேல் - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வனிந்து ஹசரங்கா - ரூ.10.75 கோடி (பெங்களூரு)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
> குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
> இஷான் கிஷன் - ரூ.15.25 கோடி (மும்பை)
> நிகோலஸ் பூரன் - ரூ.10.75 கோடி (ஹைதராபாத்)
> நிகோலஸ் பூரன் - ரூ.10.75 கோடி (ஹைதராபாத்)
> வாஷிங்டன் சுந்தர் - ரூ.8.75 கோடி (ஹைதராபாத்)
> குர்னால் பாண்டியா - ரூ.8.25 கோடி (லக்னோ)
> அம்பத்தி ராயுடு - ரூ.6.75 கோடி (சென்னை)
> மிட்சல் மார்ஷ் - ரூ.6.5 கோடி (டெல்லி)
> ஜானி பேர்ஸ்டோவ் - ரூ.6.75 கோடி (பஞ்சாப்)
> தினேஷ் கார்த்திக் - ரூ.5.50 கோடி (பெங்களூரு)

2022 ஏலம் தொடங்குவதற்கு முன்பு ஐபிஎல் அணிகள் வசமிருந்த ஏல இருப்புத் தொகை விவரம்:

> பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
> சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
> ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
> குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
> சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
> கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
> மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
> டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x