Published : 12 Feb 2022 01:05 PM
Last Updated : 12 Feb 2022 01:05 PM
பெங்களூரு: இதுவரையிலான 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
2022 ஐபிஎல் மெகா ஏலம், பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலான ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் பவுல்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க மீடியம் பேசர் காகிசோ ரபாடாவை ரூ.9.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
குஜராத் டைட்டன்ஸில் முகமது ஷமி. ஐபிஎல் விளையாட்டில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் தென் ஆப்பிரிக்க வீரர் குவின்டன் டி காக். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளேசிஸ் ரூ.7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இருந்தார்.
2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் (பிப்.12, 13) பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கான வீரர்கள் பர்ஸை பதம் பார்க்க மாட்டார்கள் என்றும், எல்லா எதிர்பார்ப்பும் இரண்டு புதிய அணிகளின் மீதே குவிந்திருக்கிறது என்றும் கள நிலவரம் தெரிவிக்கிறது.
ஐபிஎல் அணிகளிடம் உள்ள ஏல இருப்புத் தொகை விவரம்:
> பஞ்சாப் கிங்ஸ் (PBKS): ரூ.72 கோடி
> சன்ரைஸர் ஹைதராபாத் (SRH): ரூ.68 கோடி
> ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ரூ.62 கோடி
> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): ரூ.59 கோடி
> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ரூ.57 கோடி
> குஜராத் டைட்டன்ஸ்:ரூ.52 கோடி
> சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரூ.48 கோடி
> கொல்த்தா நைட் ரைடர்ஸ் (KKR):ரூ.48 கோடி
> மும்பை இந்தியன்ஸ் (MI):ரூ.48 கோடி
> டெல்லி கேப்பிடல்ஸ் (DC): ரூ.47.5 கோடி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT