Published : 03 Jun 2014 09:09 AM
Last Updated : 03 Jun 2014 09:09 AM

ஆஸி.க்கு 2-வது வெற்றி

நெதர்லாந்து தலைநகர் தி ஹேக்கில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியைத் தோற்கடித்தது. இது ஆஸ்திரேலியா பெற்ற 2-வது வெற்றியாகும்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா இரு கோல்களை அடித்து முன்னிலை பெற, ஸ்பெயினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் ஒரு கோல்கூட அடிக்காமல் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது ஸ்பெயின். முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் டிரா செய்த ஸ்பெயின், 2-வது ஆட்டத்தில் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா இரு வெற்றிகளைப் பெற்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதே பிரிவில் இந்தியாவை வீழ்த்திய பெல்ஜியம் 2-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x