Last Updated : 21 Jan, 2022 03:20 PM

 

Published : 21 Jan 2022 03:20 PM
Last Updated : 21 Jan 2022 03:20 PM

விராட் கோலி கேப்டன்ஷியிலிருந்து விலகியதில் என்ன வியப்பு இருக்கு?: பீட்டர்ஸன் கூல்

விராட் கோலி, கெவின் பீட்டர்ஸன் | கோப்புப்படம்

மஸ்கட் :இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகியதில் எனக்கு பெரிதாக எந்த வியப்பும் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளி்த்த பேட்டியில் கோலி குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

இன்றுள்ள நவீன கால கிரிக்ெகட் வீரரான விராட் கோலியைப் பற்றி விமர்சிப்பவர்கள் என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். ஏனென்றால், இதுபோன்ற பயோ-பபுள் சூழலில் இருந்து கொண்டு விளையாடுவது கடினம். ஆதலால், கோலியின் முடிவை விமர்சிப்பதும், அவரை விமர்சிப்பது நியாயமற்றது. விராட் கோலியை நீங்கள் யாரும் பார்த்தது இல்லை. கோலிக்கு ரசிகர்கள் பட்டாளம் தேவை, கோலி சிறந்த பொழுதுபோக்குநபர்.

ஆதலால், கோலியை பயோ-பபுள் சூழலில் வைத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்படுங்கள் என்று சொல்வது கடினம். ஆதலால், கோலி அனைத்துப் பிரிவிலும் கேப்டன் பதவியிலிருந்து விலகியது எனக்கு பெரிய வியப்பை அளிக்கவில்லை. ஏராளமான வீரர்கள் பயோ-பபுளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கேப்டன் பதவி உலகிலேயே சிறந்த பணி, அதை பயோ-பபுளுக்குள் அமர்ந்து கொண்டு சிறப்பாகச் செய்ய கோலியை வற்புறுத்துவதும்போது அது சிறந்த பணியாக இருக்காது.

அதீதமான அழுத்தங்களில் இருந்து தன்னை மீட்கும்வகையில் தன்னை கேப்டன் பதவியிலிருந்து கோலி விடுவித்துக்கொண்டது வியப்புக்குரியது இல்லை. இந்த பயோ-பபுள் சூழலில் விளையாடுவது மிகமிகக் கடினம்.

உலகளவில் பெருந்தொற்று காலத்தில் உலகளவில் கால்பந்துவீரர்கள் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடுவார்கள், பல்வேறு விளையாட்டுவீரர்கள் விளையாடுவதை கிரிக்கெட்டுடன் நியாயப்படுத்த முடியாது. மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடுவது கடினமானது

ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கு ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் இருக்க வேண்டும்.அது கிரிக்கெட்டாக இருந்தாலும், கால்பந்து, ரக்பி, டென்னிஸ் எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் முக்கியமானவர்கள்.

இந்திய அணிக்கு கேப்டனாக வந்துள்ள ரோஹித் சர்மா சிறந்த வீரர், ஒவ்வொரு முறையும் அவர் பேட் செய்யும்போதும் பார்த்து ரசிப்பேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறந்த முறையில் கேப்டன்ஷி செய்தார், 3 பிரிவுகளுக்கும் ரோஹித் சர்மாவே கேப்டனாக நியமிக்கப்படலாம்.

ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கலாம் என பலர் ஆலோசனை தெரிவித்தாலும், அவருக்கு இன்னும் அனுபவங்கள் தேவைப்படுவதால், சில ஆண்டுகளுக்குப்பின் ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்ேபற்கலாம்.

இவ்வாறு பீட்டர்ஸன் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x