Published : 16 Jan 2022 04:37 PM
Last Updated : 16 Jan 2022 04:37 PM
மும்பை : இந்தியக் கிரிக்கெட்டில் யாரும் நீக்க முடியாத கேப்டனாக தான் வலம்வர வேண்டும் என்று விராட் கோலி விரும்பினார். அதனால்தான் அந்த முடிவை பிசிசிஐ எடுக்கும் முன், தாமாகவே கேப்டன் பதவியை ராஜினாமாசெய்துள்ளார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
ெதன் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்று முன்னிலையில் இருந்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு தோல்வி அடைந்தது.
இதனால் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றோம் என்ற புதிய வரலாறு படைக்க முடியாமல் இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது. இதையடுத்து, விராட் கோலி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவி்ப்பை திடீரென வெளியி்ட்டார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலியின் கேப்டன் பதவி விலகல் குறித்து முன்னாள் வீர்ர சஞ்சய் மஞ்சரேக்கர் கிரிக்இன்போ தளத்தில் நடந்தஉரையாடலில் கூறுகையில் “ குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக கோலியின் வாழ்க்கையில் நடந்துவிட்டது. முதலில் ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி, டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்.
அதன்பின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கப்பட்டார். இப்போது டெஸ்ட்அணியின் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது யாரும் எதிர்பாராதது. முக்கியமான பொறுப்புகளில் இருந்த கோலி, குறுகிய இடைவெளியில் அனைத்திலிருந்தும் வெளியேறிவிட்டார்.
நான் நினைக்கிறேன், ஏதாவது ஒருவகையில் தன்னை யாரும் நீக்கமுடியாத கேப்டனாக காட்டிக்கொள்ளவே கோலி விரும்பியுள்ளார். தன்னுடைய கேப்டன் பதவிக்கு ஆபத்து வரும் என உணர்வு வந்தவுடனே டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிவிட்டார்.” எனத் தெரிவித்தார்
கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற கோலி தலைமையில் 2015்ம் ஆண்டு முதன்முதலில் இலங்ைக பயணம் மேற்கொண்டது இந்திய அணி.22 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.
2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரையும், மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரையும் வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. 2021ம் ஆண்டு நடந்த டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. உள்நாட்டில் 31 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை ஏற்ற கோலி, அதில் 24 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார், 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT