Published : 14 Jan 2022 09:27 AM
Last Updated : 14 Jan 2022 09:27 AM

 '11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுது'; 'இப்படி ஜெயிப்பதற்கு'….: டிஆர்எஸ் முறைக்கு எதிராக இந்திய வீரர்கள் பாய்ச்சல்

ஸ்டெம்ப் மைக் முன்பு சென்று காட்டமாகப் பேசிய கேப்டன் விராட் கோலி | படம் உதவி ட்வி்ட்டர்


கேப் டவுன்: தென் ஆப்பிரிக்கக் கேப்டன் டீன் எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தும் அவுட் வழங்காத டிஆர்எஸ் கேமிரா முறைக்கு இந்திய வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஸ்டெம்ப் மைக்கில் சென்று கேப்டன் கோலி கடுமையான வார்த்தைகளைத் தெரிவி்த்தார். 11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது என்றும்இந்திய வீரர்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர்

3-வது டெஸ்டின் நேற்றை கடைசி 45 நிமிடங்கள் இந்திய வீரர்கள் தங்களின் பொறுமையை இழந்து கோபத்தில் நடந்து கொண்டனர். கேப்டன் கோலி டிஆர்எஸ் முறையையும், ஒளிபரப்பாளர்களையும் பற்றி பேசியதற்கு ஐசிசி சார்பில் அபராதம் கூட விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

212 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க விளையாடி வருகிறது. மார்க்ரம் விக்கெட்டை இந்தியப் பந்துவீச்சாளர் ஷமி தொடக்கத்திலேயே வீழ்த்தினார். அடுத்தடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் பந்துவீசினர். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அஸ்வின் வீசிய ஓவரை கேப்டன் டீன் எல்கர் எதிர்கொண்டார். அப்போது டீன் எல்கர் கால்காப்பில் வாங்கிய பந்துக்கு அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தனர்.

இதற்கு களநடுவர் எராஸ்மஸ் அவுட் வழங்கினார். ஆனால், கேப்டன் எல்கர் டிஆர்எஸ்முறையில் அப்பீல் செய்தார். இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர். ஆனால், எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், டிஆர்எஸ் முறையில் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

வீரர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஸ்டெம்ப்பில் உள்ள மைக்ரோஃபோனில் கேட்கும்போது, வீரர்கள் தங்கள் அதிருப்தியையும் இதில் பதிவு செய்தனர்.

இதில் உச்ச கட்டமாக கே.எல்.ராகுல்ர் “11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது” என்றார். “ ஒளிபரப்பாளர்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறார்கள், இதை ஸ்டெம்ப் மைக்ரோஃபோன் பதிவு செய்யட்டும்” என்று கோபத்தில் தெரிவித்தனர்

அஸ்வின் கூறுகையில் “ சூப்பர்ஸ்போர்ட் நிறுவனம் தென் ஆப்பிரி்க்க அணி வெற்றி பெறுவதற்கு வேறு ஏதாவது சிறந்தவழி இருக்கிறதா எனப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

கேப்டன் கோலி ஸ்டெம்ப் மைக்ரோன் அருகே சென்று “ உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல. எல்லா நேரமும் எங்களை பின்தொடர முயற்சிக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்
விராட் கோலி முனுமுனுக்கையில், “ நம்பவே முடியவி்ல்லை. கடந்த போட்டியில் எல்கர் ஆட்டநாயகன் விருது வாங்கினார். ஜஸ்பிரித் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் ஓடினார். என்னைப் பார்த்தா எல்கர் அமைதியாக இருக்கக் கூறுகிறார்கள்” எனத் தெரிவித்தது மைக்கில் பதிவானது.

இந்தியப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் மாப்பரே கூறுகையில் “ நாங்களும் பார்த்தோம், நீங்களும் பார்த்தீர்கள். இதை போட்டி நடுவரிடமே விட்டுவிடுகிறோம். இதற்கு மேல்நான் ஏதும் கருத்து கூற முடியாது. அனைத்தையும் பார்த்துவிட்டோம், கடந்து செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x