Published : 13 Jan 2022 04:07 PM
Last Updated : 13 Jan 2022 04:07 PM

என் வாழ்நாளில் சந்திக்காத சவாலான பௌலிங்: பும்ரா குறித்து பீட்டர்சன் புகழாரம்

இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா பந்துவீச்சு குறித்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் கீகன் பீட்டர்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கேப்டவுன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா அசத்தலாகப் பந்து வீசினார். இதனால் இந்திய அணியை விட 13 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணி வீரர் கீகன் பீட்டர்சன் இந்திய அணியின் பௌலிங் அட்டாக்கை சமாளித்து அதிகபட்சமாக 72 ரன்கள் சேர்த்தார். இவர் இந்திய அணியின் பந்துவீச்சு தொடர்பாகப் பேசுகையில், "நேற்று நான் சந்தித்த இந்திய வேகப்பந்து வீச்சுதான் எனது வாழ்க்கையில் எதிர்கொண்ட மிகவும் சவாலான பந்துவீச்சு. நேற்று உண்மையிலேயே மிகவும் சவாலாக இருந்தது. எனது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும் இது மாதிரியான பௌலிங் அட்டாக்கைப் பார்த்தது கிடையாது.

தென்னாப்பிரிக்க பேட்மேன்ஸ்கள் தங்களின் இலக்கில் கவனம் செலுத்தத் தவறும் பட்சத்தில், இந்திய பௌலர்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்றி வந்தனர். நாங்கள் எடுத்த ரன்கள் அடிப்படையில் பும்ரா, ஷமி போன்ற வீரர்கள் எங்களை சோதித்தனர். இதனால் நிறைய ரன்கள் எடுக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. உலகின் தலைசிறந்த பந்துவீச்சுகளில் ஒன்றாக இந்திய பௌலிங் யூனிட் அமைந்துள்ளது. பும்ரா, ஷமியை சமாளிப்பது கடினம் என்பது இந்தத் தொடருக்கு முன்பாகவே எங்களுக்குத் தெரியும். ஆனால், எங்களால் முடிந்த அளவு அவர்களைச் சமாளிக்க முயன்று வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

பீட்டர்சனைப் பொறுத்தவரை நான்காவது வீரராகக் களமிறங்கினார். பும்ரா, ஷமி ஆரம்பத்தில் இவரை வெளியேற்ற மிகத் தீவிரமாக உழைத்தார்கள். ஆனால், பீட்டர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தேவையற்ற ஷாட்களைத் தவிர்த்து, கிடைக்கும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்தி அணிக்கு உதவினார். தொடர்ந்து நான்காம் இடத்தில் களமிறங்கி வரும் பீட்டர்சன் 3-வது வீரராகக் களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பீட்டர்சன், "நான் மூன்றாவது இடத்தில் இறங்கி பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். ஏனென்றால், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் மூன்றாவது வீரராகவே களமிறங்கியுள்ளேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x