Published : 03 Jan 2022 10:46 AM
Last Updated : 03 Jan 2022 10:46 AM
ஜோகன்னஸ்பர்க் : இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மார்கோ ஜேஸன் ஒருநாள் தொடரிலும் அறிமுகமாகிறார்.
டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விலகிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா, ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
ஜனவரி 19ம் தேதி முதல் 23ம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இடது கை வேகப்பந்துவீச்சாளர் மார்கோ ஜேஸன் அறிமுகமாகிறார், இடுப்புவலியிலிருந்து முழுமையாக குணமடையாததால், வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா தொடரிலிருந்தே விலகியுள்ளார்.
வேனே பார்னல், ஜூபைர் ஹம்சா, ஆல்ரவுண்டர் ஆன்டில் பெகுல்குவேயோ, பிரிட்டோரியஸ் இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியின் தேர்வுக்குழுத் தலைவர் விக்டர் பிட்சாங் விடுத்த அறிவிப்பில், “ தென் ஆப்பிரிக்க அணி இளம் வீரர்களைக் கொண்ட அணியாகத் தேர்வு செய்துள்ளோம். இவர்களின் செயல்பாட்டைக் காண ஆர்வமாக இருக்கிறோம். எங்கள் அணியில் உள்ள பல வீரர்கள் மிகப்பெரிய இந்திய அணிக்கு எதிராக இன்னும் விளையாடியதில்லை.
நிச்சயமாக இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய போட்டித்தொடராக இருக்கும். இளம் வீரர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள், அவர்களின் திறமை ஆகியவற்றை மதிப்பிட இந்தத்தொடர் உதவியாக இருக்கும். கேப்டன் பவுமா, பவுச்சருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரி்க்க அணி விவரம்:
டெம்பா பவுமா(கேப்டன்), கேசவ் மகராஜ்(துணைக் கேப்டன்), குயின்டன் டீ காக், ஜூபைர் ஹம்ஸா, மார்கோ ஜேஸன், ஜெனேமன் மலான், சிசான்டா மகலா, எய்டன் மார்க்ரம், ேடவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வேனே பர்னல், அன்டில் பெகுல்குவேயோ, பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, தப்ரியாஸ் ஷம்ஸி, ராஸே வேன் டர் டூசென், கெயில் வெரேனே
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT