Published : 01 Jan 2022 02:44 PM
Last Updated : 01 Jan 2022 02:44 PM
துபாய் :2021ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுப்பட்டியலில் ஒரு இந்திய வீரரின் பெயர்கூட இடம் பெறவில்லை. கடந்த ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகியவற்றில் இந்திய வீரர்கள் பலர் சிறப்பாக ஆடியபோதிலும் ஒருவரும் பரிந்துரைக்கப்படவில்லை.
2021- ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி சந்திரன் அஸ்வின் மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிதி, முகமது ரிஸ்வான், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆகியோர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதிரடியான ஷாட்கள், அற்புதமான பந்துவீச்சு, அருமையான தலைைம, அசாத்திய முயற்சிகள் ஆகியவற்றை மனதில் வைத்து, ஐசிசி சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பை வழங்கப்பட உள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூய் இலங்கைக்கு எதிராக 228 ரன்கள் சேர்த்தது கடந்த ஆண்டின் சிறந்த இன்னிங்ஸாகப் பார்க்கப்படுகிறது. இது தவிர கடந்த காலண்டர் ஆண்டில் 6 சதங்கள் உள்பட 1855 ரன்களை 18 போட்டிகளில் ஜோ ரூட் குவித்துள்ளார்.
பாகிஸ்தான் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிதி கடந்த ஆண்டில் 36 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தி சராசரி 22.20 வைத்துள்ளார். சிறந்த பந்துவீச்சு 21ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகளவில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கடந்த ஆண்டில் அப்ரிடி சிம்மசொப்னமாக பந்துவீசியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகள், டி20 உலகக் கோப்பையில் அப்ரிடியின் பந்துவீச்சு அருமையாக இருந்தது.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஆசியாவிலிருந்து ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 2-வது வீரர்.கடந்த காலண்டர் ஆண்டில் 44 போட்டிகளில் 1915 ரன்களை ரிஸ்வான் சேர்த்துள்ளார் சராசரியாக 56 வைத்துள்ளார். இதில் 2 சதங்களும், விக்கெட் கீப்பராக 56 டிஸ்மிஸல்களையும் செய்துள்ளார்.
டி20 போட்டிகளில் மட்டும் 29 போட்டிகளில் ரிஸ்வான் 1,326 ரன்கள் சேர்த்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 134 எனவும், சராசரியாக 73 வைத்துள்ளார். டி20உலகக் கோப்பைப்போட்டியில் பாகிஸ்தான் அணிஅரையிறுதிவரை செல்ல ரிஸ்வான் பங்களிப்பு முக்கியமானது.
நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 16 போட்டிகளில் 693 ரன்கள் விளாசியுள்ளார் இதில் ஒருசதம்அடங்கும். வில்லியம்ஸன் திறமையை வெறும் ரன்களால் அளவிட முடியாது. அவரின் கேப்டன்ஷியும், கடினமான சூழலிலிருந்து அணியை மீட்டெடுத்து கொண்டுவருவது. குறிப்பாக டி20 போட்டிகளில் விளையாடிய விதம் போன்றவை அற்புதமான தலைமைக்கு உதாரணம்.அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை வழிநடத்தி கோப்ையை வென்று கொடுத்தவிதம் ஆகியவை பாராட்டுக்குரியவை.
2021 ம் ஆண்டில் இந்திய அணி 16 டி20 போட்டிகளிலிலும், 12 டெஸ்ட் போட்டிகளிலும், 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது. ஆனால்,இதில் ஒருவர் கூட ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கபடவில்லை. ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்க முடியாத அளவுக்கு இந்திய வீரர்களின் செயல்பாடுமோசமாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT