Last Updated : 29 Dec, 2021 12:48 PM

 

Published : 29 Dec 2021 12:48 PM
Last Updated : 29 Dec 2021 12:48 PM

ஒரே நாளில் 18 விக்கெட்டுகள்: ஷமி 200, பந்த் 101 - தென் ஆப்பிரி்க்காவை வீழ்த்த வாய்ப்பு... 2018 வரலாறு திரும்புமா?

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது ஷமி | படம் உதவி ட்விட்டர்

செஞ்சூரியன்: இந்திய அணியின் வேகப்பந்துவீ்ச்சாளர் முகமது ஷமி, பும்ரா ஆகியோரின் பந்துவீச்சால் செஞ்சூரியனில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரி்க்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கி ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் சேர்த்து, 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 5-வது விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் 5-வது இடத்தை ஷமி பெற்றார். இதற்கு முன் கபில்தேவ் (434), இசாந்த் சர்மா (311), ஜாகீர்கான் (311), ஜவஹல் ஸ்ரீநாத் (236) ஆகியோர் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-வது டிஸ்மிஸல் செய்து புதிய மைல்கல்லை எட்டினார்.

முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இரு அணிகளிலும் சேர்த்து 18 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இந்திய அணி 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கும், தென் ஆப்பிரி்க்க அணி 197 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

அதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியும் மயங்க் அகர்வால் விக்கெட்டை இழந்தது. ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டி வேகமாக விக்கெட் வீழ்ந்த போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்திய அணி தற்போது 146 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.

இன்று ஒருநாள் மட்டுமே இருக்கிறது என்று மனதில் வைத்து ஆட வேண்டும். நாளை 5-வது மற்றும் கடைசி நாளில் மழைக்கு 100 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரி்த்துள்ளது. நாளை போட்டி நடக்கும்போது மழை பெய்யலாம் அல்லது பாதியிலேயே முடியலாம் அல்லது நடக்காமல் கூட போகலாம். ஆதலால் முடிவை அறிய இந்திய அணி குறைந்த அளவிலான இலக்கு வைத்து பந்துவீசி தென் ஆப்பிரி்க்காவுக்கு நெருக்கடி அளித்து சுருட்டலாம்.

கடந்த 2018ம் ஆண்டு இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணத்தை இங்கு நினைவுகூர வேண்டும். அந்தத் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தாலும் கடைசி டெஸ்டில் கிடைத்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்த மகத்தானது.

ஜோகன்னஸ்பர்க்கில் 2018-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி தொடங்கிய கடைசி டெஸ்டில் 241 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் களமிறங்கியது. 124 ரன்கள் வரை ஒரு வி்க்கெட் மட்டுமே தென் ஆப்பிரி்க்க அணி இழந்து வலுவாக இருந்தது.

தோல்வி இந்திய அணிக்கு நிச்சயம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில் ஷமி, இசாந்த் சர்மா, பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் கொடுத்த நெருக்கடியால் விக்கெட்டுகளை மளமளவென தென் ஆப்பிரிக்க அணி இழந்து 177 ரன்களில் சுருண்டது. அதாவது 124 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்ததென் ஆப்பிரிக்க அணி அடுத்த 53 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் வலுவான டிவில்லியர்ஸ், டீகாக், எல்கர், டூப்பிளசிஸ், பிலான்டர், அம்லா, மார்க்ரம் ஆகியோர் இருந்தனர். அவர்களுக்கே நெருக்கடி கொடுத்து இந்திய அணியின் ஷமி, பும்ரா பந்துவீசினர்.

இப்போது இருக்கும் தென் ஆப்பிபிரிக்க அணியில் பேட்ஸ்மேன்கள் அனுபவம் குறைந்தவர்கள், 50 ரன்கள் பேட்ஸ்மேன்கள் இவர்களுக்கு நீண்ட இன்னிங்ஸ் ஆடிய அனுபவம் இல்லை. இவர்களுக்கு பந்துவீ்ச்சில்நெருக்கடி அளி்த்தால் விக்கெட்டுகளை மளமளவென இழப்பார்கள் 2018ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்பும்.

அதற்கு இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் இன்னும் கூடுதலாக 200 ரன்கள் வரை மட்டும் அடித்து, அதாவது 300 முதல் 330 ரன்கள் வரை இலக்கு வைத்து இன்று மாலை தேநீருக்குபின் பந்துவீச வேண்டும். புதிய பந்து எடுத்து பந்துவீசும்போது நிச்சயம் விக்கெட்டுகள் விழும். கடைசி நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் அளிக்கும் நெருக்கடியால் வெற்றி வசமாகும்.

எப்படி கணக்கிட்டாலும் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதற்கு கேப்டன் கோலி நன்கு திட்டமிட்டு செயல்பட்டால், லண்டன் லார்ட்ஸில் கிடைத்த வெற்றி போல் மகத்தான வெற்றியை இந்திய அணி பெற முடியும்.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ராகுல், அகர்வால் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளம்தான் இந்திய அணியை 327 ரன்கள் வரை இழுத்துவந்துள்ளது. ராகுல், ரஹானே ஆட்டமிழந்தபின், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக பேட்டிங் செய்தனர்.

சர்வதேச அளவில் பெயர் பெற்ற புஜாரா, ரஹானே, ரிஷப் பந்த்போன்ற பேட்ஸ்மேன்கள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு சாபக்கேடு. தென் ஆப்பிரிக்க அணி மாற்றத்தின் பிடியில் இருப்பதால், பேட்டிங், ப ந்துவீச்சில் தடுமாற்றம் இருப்பதில் நியாயம் இருக்கிறது, இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள் அவர்கள் சொற்பரன்னில் வீழ்ந்தது ஆய்வு செய்யப்பட வேண்டிய அம்சம்.

செஞ்சூரியன் ஆடுகளம் காலை நேரத்தில் ஈரம், ஈரக்காற்று ஆகியவற்றால் புதிய பந்தில் பந்துவீசும்போது நன்கு பவுன்ஸ்ஆகும், வேகம் அதிகமாக இருக்கும் அதைப் பயன்படுத்தி இந்திய அணியின் விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பறித்தனர். ஆனால் ஆடுகளத்தை செட்டில் ஆகவிடாமல் அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து தென் ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகளையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு பவுமா, டீகாக் ஜோடி சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சேர்ந்து 72 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். டீகாக் 34 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிவந்தார்.

அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தென் ஆப்பிரி்க்க அணி இழக்கத் தொடங்கியது. அரைசதம் அடித்த பவுமா 52 ரன்னில் ஷமிபந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

104 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 93 ரன்களில் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் கடைசி 3 விக்கெட்டுகளை வெறும் 16 ரன்களுக்குள் இழந்தது. 62.3 ஓவர்களில் 197ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணிமுதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா 3விக்கெட்டுகளையும் , தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x