Last Updated : 21 Dec, 2021 10:00 AM

 

Published : 21 Dec 2021 10:00 AM
Last Updated : 21 Dec 2021 10:00 AM

 14வயது சிறுமி பலாத்காரம்: பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் மீது வழக்குப்பதிவு

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்

சிறுமியை பலாத்காரம் செய்து, மிரட்டியதற்கு துணைபோனதாக அளிக்கப்பட்ட புகாரில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா மீது லாகூர் ஷாலிமர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாசிர் ஷா மீது கடத்தல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் ஆகிய பிரிவுகளில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷாவின் நண்பர் பர்ஹான் 14வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கடும்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பர்ஹான் மிரட்டியுள்ளார். பர்ஹான் தன்னைக் கடத்துவதற்கும், பலாத்காரத்தில் ஈடுபடுவதற்கும் யாசிர் ஷா உதவியுள்ளார்.

யாசிர் ஷா

பர்ஹான்மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறுவதற்காக நான் வாட்ஸ்அப்பில் யாசிர் ஷாவை தொடர்பு கொண்டேன்.அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, இது பற்றி வெளியே கூறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

போலீஸிடம் போகாமல் இருந்தால் ஒரு வீடும், 18வயது வரை தேவையான பணமும் தருவதாக ஆசைவாரத்தை தெரிவித்தார்” என புகாரில் தெரிவித்தார்.இதையடுத்து, யாசிர் ஷா மீது கடத்தல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் ஆகிய பிரிவுகளில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் “விரலில் காயம் காரணமாக வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷா இடம் பெறவில்லை. பிரதான ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் மீது இதுபோன்ற புகாரும், போலீஸில் வழக்குப்பதிவும்செய்யப்பட்டுள்ளதால், தகவல்களை திரட்டி வருகிறோம்.

அனைத்து விவரங்களும் கிடைத்தபின் உண்மையைஆய்வு செய்தபின் முடிவு எடுக்கப்படும் அதுவரை எந்த நடவடிக்கையும் யாசிர் ஷா மீது இருக்காது” எனத் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான்அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய யாசிர் ஷா, 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x