Published : 16 Dec 2021 08:29 AM
Last Updated : 16 Dec 2021 08:29 AM

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் திடீர் விலகல்: புதிய கேப்டன் அறிவிப்பு

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் | கோப்புப்படம்


அடிலெய்ட்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று தொடங்க இருக்கும் நிலையில், திடீரென ஆஸ்திரேலியஅணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

ரெஸ்டாரன்ட்டில் கரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நேற்று இரவு நெருங்கிய தொடர்பில் இருந்ததால், தன்னை தனிப்படுத்திக்கொள்ள இருப்பதால் விலகுவதாக கம்மின்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ஏற்கெனவே காயம் காரணமாக ஜோஸ் ஹேசல்வுட் விலகிய நிலையில் தற்போது கம்மின்ஸ் விலகியது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பலவீனப்படுத்தும்

இதையடுத்து, ஆஸ்திேரலிய அணியை கேப்டனா ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார், துணைக் கேப்டனாக டிராவிஸ் ஹெட் நியமிக்கப்பட்டுள்ளார். பாட் கம்மின்ஸுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் நீசர் அறிமுகமாகிறார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து, பகலிரவு ஆட்டம் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ட்விட்டரில் பதிவிட்டகருத்தில் “2-வது டெஸ்டில் விளையாட முடியாமல் இருக்கிறேன். ஆனால், வேகப்பந்துவீச்சாளர் நீசர் இறுதியாக வாய்ப்புப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அருமையாக பந்துவீசக்கூடியவர், திறமையான வீரர். மிகவும் ஏமாற்றமளிக்கிறது, கடந்த இரு ஆண்டுகளாக கோவிட் நம்மை பந்தாடுகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து உற்சாகப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே நைன் நாளேடு வெளியி்ட்ட செய்தியில், “ அடிலெய்டில் உள்ள ரெஸ்டாரன்டில் நேற்றுஇரவு கம்மின்ஸ் சாப்பிட்டபோது அவருக்கு அருகே அமர்ந்திருந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் உடனடியாக கம்மின்ஸ் அங்கிருந்து வெளியேறி பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொண்டார். அதில் நெகட்டிவ் எனத் தெரியவந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது.

பாட் கம்மின்ஸ் பயோ-பபுள் விதிகளை ஏதும் மீறவில்லை. ஆனால், தெற்கு ஆஸ்திேரலியாவில் கடந்த சில வாரங்களாக எல்லைகள் திறக்கப்பட்டதால், மக்கள் சகஜமாக அனைத்து ரெஸ்டாரன்ட்களுக்கும் வந்து செல்கிறார்கள். அவ்வாறு ஒருவர் நேற்று வந்து கம்மின்ஸ் டேபிள் அருகே அமர்ந்தபோதுதான் அந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ கம்மின்ஸ் சாப்பிட்ட அதே ரெஸ்டாரன்ட்டில்தான் மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயான் இருந்தார்கள். ஆனால், தனித்தனி மேஜையில் இருந்தனர்” எனத் தெரிவித்துள்ளது.

ெதற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார விதிகள்படி, இரு தடுப்பூசிகளும் செலுத்திய ஒருவர் கரோனா பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால், உடனடியாக பிசிஆர் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும், 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன்பின் 6-வது நாளிலும், 13-வது நாளிலும் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்என்பது விதியாகும்.அதன்படி பார்த்தால், கம்மின்ஸ் அடுத்த 2 வாரங்களுக்கு விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்

ஆனால், மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x