Published : 29 Nov 2021 02:05 PM
Last Updated : 29 Nov 2021 02:05 PM

வாழ்நாள் முழுவதும் நிறத்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகினேன்: மனம் திறக்கும் தமிழக வீரர் சிவராமகிருஷ்ணன் 

தமிழக வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் | படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி

வாழ்நாள் முழுவதும் என்னுடைய நிறத்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வேறுபாடுகாட்டப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சிவராமகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் “ இந்தியாவுக்கு வெளியேயேும், உள்ளேயும் என்னுடைய 15 வயதிலிருந்து அதிகமாகப் பயணித்திருக்கிறேன். நான் சிறுவயதிலிருந்து என் நிறத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் ஒருவிதமான எண்ணம் எனக்கு புதிராகவே இருந்தது.

கிரிக்கெட்டை நன்றாக அறிந்தவர்கள், புரிந்தவர்ளுக்கு இது நிச்சயம் புரியும். வெயில்காலத்திலும் வெயில் இல்லாத நேரத்திலும் நான் பயிற்சியில் இருந்திருக்கிறேன், விளையாடியிருக்கிறேன், நான் ஒருமுறைகூட வெயிலில் விளையாடியதற்காக நான் தோல் நிறம் குறைந்துவிட்டதாக வருத்தப்பட்டதில்லை.

நான் செய்வதை விரும்புகிறேன், சில விஷயங்களை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் வெளியே செலவிட்டிருக்கிறேன். நாட்டிேலயே அதிகமான வெப்பமான பகுதியான சென்னையிலிருந்து வந்தேன், என்னுடைய இளமைக்கால வாழ்க்கை பெரும்பகுதி கிரிக்கெட் மைத்தானத்திலேயே செலவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்

இதற்கு பதில் அளித்து தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் “ என் நிறத்தால் நான் விமர்சிக்கப்பட்டிருக்கிறேன் என் வாழ்க்கை முழுவதும் என் நிறத்தால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டு வேறுபாடு காட்டப்பட்டேன். இதைப்பற்றி ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. ஆனால் துரதிர்ஷ்டமாக இதுபோன்ற நிகழ்வுகள் நம்முடைய சொந்த தேசத்திலேயே எனக்கு நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களாக நிறவெறி என்பது, மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவருகிறது. இங்கிலாந்தில் யார்க்ஸையர் கிரிக்கெட் கிளப்பில் தான் நிறைவெறியோடு பாகுபாடு காட்டப்பட்டேன் என ஆசிம் ரபிக் எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரத்தில் யார்க்ஸையர் கிளப் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x