Published : 14 Nov 2021 04:58 PM
Last Updated : 14 Nov 2021 04:58 PM
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவி்ட் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் வகித்துவந்த என்சிஏ இயக்குநகர் பதவிக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட உள்ளார்.
இந்ததத் தகவலை உறுதி ெசய்த பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், விரைவில் என்சிஏ இயக்குநராக லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார் என்பதையும் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரோடு என்சிஏ இயக்குநரும் நெருக்கமாக, இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்
இந்த சூழலில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட்டும், விவிஎஸ் லட்சுமணும் இணைந்தால், இந்திய அணிக்கு எதி்ர்காலத்தில் நல்ல வீரர்கள் கிடைப்பார்கள், வலுவான தளம் அமைக்கப்படும்.
சவுரவ் கங்குலி, ஜெய் ஷா இருவருமே விவிஎஸ் லட்சுமண் என்சிஏ இயக்குநராக பொறுப்பேற்க விரும்புகிறார்கள். ஆனால், லட்சுமணுக்கு குழந்தைகள் சிறிய வயதில் இருப்பதால், முழுநேரமாக இந்தத் தொழிலுக்கு வருவதில் தயக்கம் காட்டி வருகிறார்.
என்சிஏ இயக்குநராகிவிட்டால் குறைந்தபட்ச ஆண்டுக்கு 200 நாட்கள் பெங்களூருவில் லட்சுமண் இருந்தாகவ வேண்டும். தொடக்கத்தில் பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த விவிஎஸ் லட்சுமண் பின்னர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து விரைவில் என்சிஏ இயக்குநராக லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார்.
என்சிஏ இயக்குநராக லட்சுமண் வருவதால், அவர் வகித்து வந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மென்ட்டார் பணியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும், எந்தவிதமான சேனலும் வர்ணனையாளாக இருக்கமாட்டார், நாளேடுகளில் எந்தவிதமான கட்டுரையும் எழுதமாட்டார். அவ்வாறு செயல்படுவது இரட்டைப் பதிவு ஆதாய பிரச்சினையை எழுப்பும் என்பதால், லட்சுமண் அதிலிருந்து விடுபட்டுள்ளார்.
டிசம்பர் 4-ம் தேதி பிசிசிஐ அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் நடக்க உள்ளது. அதற்குள்ளாக விவிஎஸ் லட்சுமண் நியமன அறிவிப்பு வெளியாகிவிடும்எனத் தெரிகிறது.
இந்திய அணிக்கு வருங்கால வீரர்களை உருவாக்கும் பட்டறையாக என்சிஏ இருந்து வருகிறது.
19வயதுக்குட்பட்டோருக்கான அணி, இந்திய ஏ அணி ஆகியவற்ரகு்கு பயிற்சி ஆகியவற்றை அளிக்கும் இடமாக இருக்கிறது. என்சிஏ இய்குநராகும் விவிஎஸ் லட்சுமண், 19வயதுக்குட்டோபருக்கான அணி, ஏ அணி ஆகியவற்றின் செயல்பாடுகளையும் பயிற்சிகளையும் கண்காணிக்கும் பொறுப்பும் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT