Published : 13 Nov 2021 07:31 PM
Last Updated : 13 Nov 2021 07:31 PM

பயம்..தடுப்பூசி பயம்: கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய முரளி விஜய்: முஷ்டாக் அலி டி20 தொடருக்கு தேர்வில்லை

முரளி விஜய் | கோப்புப்படம்

சென்னை


தமிழக வீரர் முரளி விஜய் இன்னும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால், சயத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

முரளி விஜய் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், தடுப்பூசி செலுத்தாத எந்த வீரரும் பயோ-பபுள் சூழலுக்குள் வரக்கூடாது என பிசிசிஐ தெரிவித்துவிட்டது. இதனால் பயோ-பபுள் சூழலுக்குள் தன்னை ஆட்படித்திக் கொள்ள முடியாது என்பதால் வேறுவழியின்றி முரளி விஜய் இந்த சீசனிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ முரளி விஜய் தடுப்பூசி செலுத்திக்கொள்வதும், மறுப்பதும் அவரின் தனிப்பட்ட முடிவு. தடுப்பூசி செலுத்த அவர்தயங்குகிறார். பிசிசிஐ கரோனா வழிகாட்டி நெறிமுறைகள்படி கரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்கள் போட்டி தொடங்க ஒருவாரம் முன்பே பயோ-பபுள் சூழலுக்குள் வர வேண்டும். இதில் முரளி விஜய் ஆர்வமாக இல்லை என்பதால் அவரை தமிழக கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யவில்லை” எனத் தெரிவிக்கின்றன

கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் கர்நாடக அணிக்குஎதிராக தமிழக அணியில் முரளி விஜய் பங்கேற்றார். கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த முறையும்தன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று தேர்வுக்குழுவுக்கு முரளி விஜய் கடிதம் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முரளி விஜய் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறுகையில் “ தேர்வுக்குழுக் கூட்டத்தில் முரளி விஜய் பற்றித் தேர்வாளர்கள் யாரும் பேசவில்லை. உள்நாட்டுத் தொடரில் தமிழக உத்தேச அணிக்கு கூட முரளி விஜய் சேர்க்கப்படவி்ல்லை.

முதலில் முரளி விஜய் கரோனா தடுப்பூசி செலுத்தட்டும், அதன்பின் தேர்வுக்குழுவினர் பரிசீலிப்பார்கள். தமிழக அணிக்குள் வரும் முன் முரளிவிஜய் தனது உடற்தகுதியை நிரூபிக்க சில போட்டிகளில் விளையாட வேண்டும் அதன்பின்புதான் அணிக்குத் திரும்பமுடியும்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x