Published : 24 Mar 2016 03:42 PM
Last Updated : 24 Mar 2016 03:42 PM
வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை டி20 பரபரப்பு வெற்றியை அடுத்து, தமிம் இக்பாலுக்கு விடப்பட்ட கேட்ச் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்று உணர்ந்ததாக அஸ்வின் தெரிவித்தார்.
முதல் ஓவரில் ஆஷிஷ் நெஹ்ரா கடினமான தன் பந்து வீச்சில் தமிம் கொடுத்த கடினமான வாய்ப்பை பிடிக்க முடியாமல் போனது. பிறகு அஸ்வின் பந்தில் தமிம் இக்பால் ஸ்வீப் ஆட , டாப் எட்ஜ், ஷார்ட் பைன் லெக் திசையில் பும்ராவிடம் வெகு சுலபமான கேட்சாகச் சென்றது. ஆனால் அவர் அதனை பலரும் அதிர்ச்சியடையும் விதத்தில் நழுவ விட்டார். இந்நிலையில்..
ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அவர் கூறியதாவது:அந்தக் கடைசி பந்துக்கு முன்பாக அனைவரும் ஒன்று கூடி என்ன செய்யலாம் என்று விவாதித்தோம். பவுன்சர் வீசுவது சரியாக இருக்கும் என்று நான் யோசனை கூறினேன். ஏனெனில் கடைசி வரிசை வீரர் ஒருவருக்கு அடிக்கக் கடினமான பந்து பவுன்சர் என்று நான் நினைத்தேன். எப்படியோ அவர் கடைசியில் பந்தை கோட்டை விட்டார். வெற்றி பெற்றொம்
(கடைசி ரன் அவுட்) ஸ்டம்புக்கு ஓடி வந்து ரன் அவுட் செய்வதே சிறந்தது. அங்கிருந்து அடிக்கும் போது ஸ்டம்பில் பட்டு பந்து வேறு திசைக்கு திரும்பி விட வாய்ப்பிருக்கிறது.
நாங்கள் வெற்றி பெற்றிருக்காவிட்டால் கூட சூப்பர் ஓவர் உள்ளது. முஷ்பிகுர் ரஹிம் அந்த பவுண்டரியை அடித்த பிறகு நான் நினைத்தேன் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்று. ஆனால் ஹர்திக் நெருக்கடியில் தன்னை நிரூபித்தார். அவரும் நெஹ்ராவும் நன்றாக வீசினர். கடைசி ஓவரை வீச இன்னொரு தெரிவு யுவராஜ் சிங். 146 ரன்கள் எடுத்த பிறகே நிச்சயம் ஒரு பெரிய பணி இருக்கிறது என்று நினைத்தோம். சிறிய மைதானம் வேறு.
கடைசி பந்தில் நாங்கள் கூடி விவாதித்த போது, அவர்கள் நிச்சயம் ரன் ஓட முயற்சிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் மஹமுதுல்லா கேட்ச் மேட்சைத் தீர்மானித்தது, ஜடேஜா மிக அருமையாக அதனை பிடித்தார்.
தொடக்கத்தில் நல்ல பந்துகளை வீசுவது என்பதாகவே நிலைமைகள் இருந்தன. ஆனால் தமிம் இக்பாலுக்கு கேட்ச் விடப்பட்ட பிறகு பின்னடைவு ஏற்பட்டது. நான் பந்து வீச வந்த போது விக்கெட்டுக்காக முயல்வதா அல்லது ரன்களை கட்டுப்படுத்துவதா என்ற குழப்பத்தில் வீசினேன். மேலும் நேர் திசை பவுண்டரி சிறியது. அதனால் பந்தின் தையலை சரியான நிலையில் வைத்து வீச முடிவெடுத்து ஸ்பின் செய்த போது பந்து மைல் கணக்கில் திரும்பியது. நான் ஷாகிபை வீழ்த்தினேன். எனது ஓவர்களை துருப்புச் சீட்டாக பயன்படுத்தினோம். 2007 டி20 உலகக்கோப்பையில் ஒரு நெருக்கமான போட்டியை பார்த்தேன். இது அதைவிடவும் நெருக்கமான போட்டி.
இவ்வாறு கூறினார் அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT