Last Updated : 11 Nov, 2021 08:37 AM

1  

Published : 11 Nov 2021 08:37 AM
Last Updated : 11 Nov 2021 08:37 AM

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து: இங்கிலாந்து கனவை நாசம் செய்த நீஷம்; ஒரே ஓவரில் ஆட்டத்தை முடித்த மிட்ஷெல் 

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து நியூஸிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற டேரல் மிட்ஷெல் ஆர்ப்பரித்த காட்சி | படம் உதவி ட்விட்டர்

அபு தாபி

ஜிம்மி நீஷம், டேரல் மிட்ஷெல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 5 வி்க்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி தங்களுடைய 4 முயற்சிகளில் 3-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பை, 2019ம் ஆண்டு உலகக் கோ்பபை, 2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

ஜிம்மி நீஷம்

உலகக் கோப்பையை வெல்வதற்கு சாத்தியம் உள்ள அணி என இங்கிலாந்து அணி கூறப்பட்ட நிலையில் கடைசி 3 ஓவர்கள்தான் இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த கனவையும் கலைத்தது. 15 ஓவர்கள்வரை ஆட்டம் இங்கிலாந்தின் கைகளில்தான் இருந்தது. நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ஜிம்மி நீஷம் களமிறங்கி இங்கிலாந்து வீரர்களின்கனவை நாசமாக்கிச் சென்றார்.

நியூஸிலாந்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தொடக்க ஆட்டக்காரர் டேரல் மிட்ஷெல், நடுவரிசை பேட்ஸ்மேன் ஜிம்மி நீஷம் இருவர் மட்டும்தான். ஜிம்மி நீஷம் களத்தில் இருந்ததையும், அவர் அடித்த சிக்ஸரையும் பார்த்தபோது, 2019-ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் ஓவர்தான் நினைவுக்கு வந்து தே-ஜாவுக்கு அழைத்துச்சென்றது. சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் நீஷம் 14 ரன்கள் அடித்தநிைலயில் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது.

அதேபோன்ற தேஜாவு இந்த முறை நிகழாமல் பார்த்துக்கொண்ட நீஷம் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் போட்டியை திருப்பிவிட்டுச் சென்றார். 11 பந்துகளைச் சந்தித்த நீஷம் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 27 ரன்கள் சேர்த்து நியூஸிலாந்து அணியின் பக்கம் ஆட்டம் செல்ல காரணமாக அமைந்தார்.

தொடக்க ஆட்டக்காரர் டேரல் மிட்ஷெல் 47 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து(4சி்க்ஸர்,4பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மிகுந்த பொறுப்புடன் ஆடிய டேரல் மிட்ஷெல், வோக்ஸ்வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களைச் சேர்த்து பதற்றப்படவைக்காமல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

மொத்தத்தில் கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்வி்க்கு சரியாக பழிதீர்த்துக்கொண்டது நியூஸிலாந்து அணி. அந்தப் போட்டியில் செய்த எந்தத் தவறையும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து ஆட்டத்தை ஒருஓவர் இருக்கும் போதே டேரல் மிட்ஷெல் முடித்துவிட்டார்.

15 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இருக்கும் பந்துகளைவிட ஒருமடங்கு ரன் தேவைப்பட்டது. ஆட்டமும் இங்கிலாந்து பக்கம்தான் இருத்து. களத்தில் மிட்ஷெல், பிலிப்ஸ் இருந்தனர்.

லிவிங்ஸ்டோன் வீசிய 16-வது ஓவரில் பிலிப்ஸ் 2ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து நீஷம் களமிறங்கினார், அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதால், நியூஸிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்தது.
ஜோர்டன் வீசிய 17-வது ஓவரில் நீஷம் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி என 23 ரன்களை விளாசியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 3 ஓவர்களில் நியூஸிலாந்து வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் வீசிய 18-வது ஓவரைச் சந்தித்த நீஷம் ஒரு சிக்ஸரும், மிட்ஷெல் ஒரு சி்க்ஸரும் விளாசினர். நீஷம் 27 ரன்னில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. மிட்ஷெல், சான்ட்னர் களத்தில் இருந்ததனர். 19-வது ஓவரை வோக்ஸ் வீச, மிட்ஷெல் எதிர்கொண்டார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த மிட்ஷெல், 2-வது பந்தில், லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரும், 3-வது பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரும் விளாசினார்.

4-வது பந்தில் மிட்ஷெல் ஒரு ரன்னும், 5-வது பந்தில் சான்ட்னர் ஒரு ரன்னும்எடுத்தனர். கடைசிப்பந்தில் மிட்ஷெல் பேக்வேர்ட் ஸ்குயர் திசையில் பவுண்டரி அடிக்க நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒரே ஓவரில் 20 ரன்கள் சேர்த்து அணியை எளிதாக மிட்ஷெல் வெற்றி பெற வைத்தார்.

கடைசி ஓவர்வரை ஆட்டத்தை இழத்துக்கொண்டிருந்தால், பதற்றம் அதிகரிக்கும் என்பதை உணர்்ந்த மிட்ஷெல் 19-வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து 72 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டியில் கடந்த 5 ஆண்டுகளில் சிக்ஸர் அடிப்பதில் சிறந்த வீரராகக் கருதப்பட்டவர் டேரல் மிட்ஷெல் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஓவர்கள்வரை டேரல் மிட்ஷெல் கணக்கில் ஒரு பவுண்டரி மட்டும்தான் இருந்தது. ஆனால்,15 ஓவர்களுக்கு மேல் மிட்ஷெல் தனது பேட்டிங்கில் கியரை மாற்றி டாப் கியரில் பயணித்தார்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றி 80 சதவீதம் இருந்தது. ஆனால், அனைத்தையும் மாற்றிவிட்டது, பின்ச் ஹிட்டர் ஜிம்மி நீஷத்தின் அதிரடியும், மிட்ஷெலின் பொறுப்பான பேட்டிங்கும்தான் காரணம்.

நியூஸிலாந்து அணியில் கான்வே(46) ரன்கள் சேர்த்ததுதான் ஓரளவுக்கு 2வதுநல்ல ஸ்கோராகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்தில்(4) வில்லியம்ஸன்(5) இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். பிலிப்ஸ்2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, வெற்றியைக் கோட்டைவிட்டுவிட்டார்கள் என்றுதான் கூற முடியும். 166 ரன்களை அருமையாக டிபென்ட் செய்து கேப்டன் மோர்கன் கொண்டு சென்றார். 15வது ஓவர்கள் வரை ஆட்டத்தில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கே 80 சதவீதம் வாய்ப்பு இருந்ததாகக் கணிக்கப்பட்டது. ஏனென்றால், நியூஸிலாந்துக்கு தேவைப்படும் ரன் ரேட் 12 ஆக இருந்தது.

ஜோர்டன் வீசிய 17-வது ஓவரும், ரஷித் வீசிய 18-வது ஓவரும்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி ஓவரை வோக்ஸிடமும், 19-வது ஓவரை ஜோர்டானிடமும் கொடுத்திருக்கலாம். ஆனால், 19-வது ஓவரை வோக்ஸ் லைன் லென்த்தில் வீசாமல் ஸ்லாட்டில் வீசியதால் இரு பந்துகளுமே சிக்ஸருக்கு மிட்ஷெல் பறக்கவிட்டார். இங்கிலாந்து அணி தனது வெற்றியை கடைசி 3 ஓவர்களில்தான் தவறவிட்டது.

வேகப்பந்துவீச்சாளர் மில்ஸ், தொடக்க ஆட்டக்கார்ர ஜேஸன் ராய் காயத்தால் விலகியது இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பலவீனத்தை ஏற்படுத்தியது.

இந்த போட்டித்தொடரில் இங்கிலாந்து அணி தான் சந்தித்த அனைத்துப் போட்டிகளிலும் ஆட்டத்தின் முதல்பந்திலிருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்க்க வேண்டும், எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை, திட்டத்தை குலைக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் விளையாடியிருந்தன.

ஆனால், இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக தங்களுடைய திட்டத்தை மாற்றி ஒவ்வொருபந்தையும் நிதானமாக ஆடத் தொடங்கியதுதான் இங்கிலாந்து தோல்விக்கு மிகப்பெரியகாரணங்களில் ஒன்று. தங்களுடைய இயல்பான ஆட்டத்திலிருந்து இங்கிலாந்து அணி நிழுவியிருக்ககூடாது. 15 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் யாரும் சிக்ஸர் அடிக்கவில்லை, அதன்பின்புதான் சிக்ஸர் அடித்தனர்.

தொடக்கத்திலேயே பட்லர்(29), பேர்ஸ்டோ(11) இருவரும் ஆட்டமிழந்ததால், ஒட்டுமொத்த சுமையும் நடுவரிைச பேட்ஸ்மேன்கள் மீது விழுந்ததால், அவர்களால் அதிரடியாக ஆடி ஸ்கோரை விரைவாக நகர்்த்த முடியவில்லை. விக்கெட்டை நிலைப்படுத்த வேண்டிய நோக்கில்தான் டேவிட் மலான், மொயின் அலி இருவரும் விளையாடினர். இருவரும் சேர்ந்து 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

டேவிட் மலான் 41 ரன்களில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டோன் 17 ரன்னில்விக்கெட்டை இழந்தார். நிதானமாக ஆடிய மொயின் அலி அரைசதம் அடித்து 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மொயின் அலி அடித்த முதல் அரைசதம் இதுவாகும்

நியூஸிலாந்து தரப்பில் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். சிறந்த சுழற்பந்துவீச்சாளரான சான்ட்டனருக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கப்ட்டது. போல்ட் 4 ஓவர்கள் வீசி 40 ரன்களைவாரி வழங்கினார். சோதி, சவுதி மட்டுமே ஓரளவுக்கு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். சவுதி, மில்னே, சோதி,நீஷம் தலாஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x