Published : 09 Nov 2021 04:32 PM
Last Updated : 09 Nov 2021 04:32 PM
இந்திய ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் வலியுறத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நமிபியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இ்ந்த வெற்றியுடன் விராட் கோலியின் கேப்டன் பதவிக்காலமும் முடிவுக்குவந்தது. டி20உலகக் கோப்பைப் போட்டித் தொடர் தொடங்கும் முன்பே கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை கோலி அறிவித்துவிட்டார்.
ஆனால் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வியால், கோலியிடம் இருந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ விராட் கோலி, ஒருநாள், டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனால், இது கோலியின் முடிவைப்பொருத்தது. அணியில் ஒரு வீரராக விளையாட கோலி விரும்பினாலும் அது அவரின்முடிவுதான்.
கோலியின் கேப்டன்ஷியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது, பல வெற்றிகளைப் பெற்றது, புத்திசாலித்தனமாகத்தான் கோலி கேப்டன்ஷிப் செய்தார். விராட் கோலி சிறந்த வீரர், ஆக்ரோஷமான கேப்டனாகஇருந்துஅணியை வழிநடத்தினார். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியை விட்டு விலகுவது கோலியின் தனிப்பட்ட முடிவு.
ஐசிசி போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரையிறுதி கூட செல்லாமல் வந்தது குறி்த்தும் இந்திய அணி சுயபரிசோதனை செய்ய வேண்டும். கடைசியாக இந்தியஅணி 2013ம் ஆண்டு ஐசிசி போட்டிகளில் சாம்பியன்ஷிப் வென்றது அதன்பின் 8 ஆண்டுகளாக ஏதும் வெல்லவில்லை.
இது குறித்த நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும். இருநாடுகளுக்குஇடையிலான போட்டிகளில் வெல்வது ஒருபுறம் இருந்தாலும், உலகளவில் வெல்லும் போட்டியைத்தான் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதேநேரம், கடினமான காலகட்டங்களில் நாம் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ேசவாக் ெதரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT