Published : 09 Nov 2021 03:30 PM
Last Updated : 09 Nov 2021 03:30 PM

கோலி- சாஸ்திரி சகாப்தம்: இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றிகள்

ரவி சாஸ்திரி, விராட் கோலி,

துபாய்


பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி கூட்டணியில் இந்திய சந்தித்த மோசமான தோல்விகளைவிட, வரலாற்று வெற்றிகள், மைல்கல்கள்தான் அதிகம். இருவரின் 7 ஆண்டுகள் கூட்டணி, உறவு டி20 உலகக் கோப்பைப் போட்டியோடு முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய அணி பெற்ற முக்கிய வெற்றிகள்:

பார்டர் –கவாஸ்கர் கோப்பை

2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி தலைமையில் பயணம் செய்த இந்திய அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசியாவைச் சேர்ந்த முதல் அணி என்ற பெருமையையும் இந்திய் அணி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாமல் வலுகுறைந்த அணியுடன் மோதி பெற்ற வெற்றி என்று கூட விமர்சிக்கப்பட்டது

மீண்டும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை

2-வதுமுறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கடந்த ஆண்டு இந்திய அணி வென்றது. வார்னர், ஸ்மித் என அனைத்து வீர்களும் அணியில் இருந்தபோதிலும் இந்த வெற்றியை இளம் வீரர்கள் பெற்றுக் கொடுத்தனர். முதல் டெஸ்டின்2-வது இன்னிங்ஸில் 36ரன்களில் ஆட்டமிழந்து மோசமான தோல்வியைச் சந்தித்த இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளுடன் தொடரைக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியுடன் கோலி தாயகம் திரும்பியநிலையில் ரஹானே அணியை வழிநடத்தி 2-வது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப்
இங்கிலாந்தில் நடந்த உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிவரை முன்னேறி நியூஸிலாந்து அணியிடம் தோற்றது இந்திய அணி. பல டெஸ்ட் போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்று பைனலுக்கு முன்னேறி, நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டில் இந்திய அணி கோப்பையை இழந்தது

2019 உலகக் கோப்பை
2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிவரை கோலிப்படை , சாஸ்திரி வழிகாட்டுதலில் முன்னேறியது. அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் 8 விக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இங்கிலாந்துக்கு இந்த ஆண்டு டெஸ்ட்தொடருக்குப் பயணம் செய்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசிப் போட்டி கரோனா தொற்றுகாரணமாக நிறுத்தப்பட்டது. இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறுவது நீண்டகாலத்துக்கு பின் நடந்துள்ளது.

வரலாற்று வெற்றி
ரவி சாஸ்திரி வழிகாட்டுதலில் கோலி கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிராக அந்நாட்டிலேயே டி20 தொடரை இந்திய அணி வென்றது. இந்த 4 அணிகளுக்கு எதிராக அவர்களின் மண்ணில் வைத்து டி20 தொடரை எந்த அணியும் கைப்பற்றியதில்லை.

இலங்கை வொயிட்வாஷ்
2017ம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்த இந்திய அணி, டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 தொடர் அனைத்தையும் கைப்பற்றி, வொயிட்வாஷ் செய்து திரும்பியது.

மே.இ.தீவுகளில் வரலாற்று சாதனை

மே.இ.தீவுகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு சென்ற கோலி படையினர், டி20,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை வென்று வொயிட்வாஷ் செய்து திரும்பினர். மே.இ.தீவுகளுக்கு சென்று முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று கோலிப்படை தாயகம் திரும்பியது.

தரமான வேகப்பந்துவீச்சு
ரவி சாஸ்திரி, கோலி தலைமையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு வலுவடைந்தது. எந்த நாட்டின் ஆடுகளத்திலும் திறமையாகப் பந்துவீசும் அளவுக்கு வீரர்களை உருவாக்கி, சவாலாகத் திகழ்ந்தது.

42 மாதங்கள் முதலிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, 42 மாதங்கள் முதலிடத்தில் இருந்தது. 2016ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுவரை டெஸ்ட் தரவரிசையில் இந்தியஅணியை எந்தஅணியாலும் அசைக்க முடியாமல் திகழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x