Published : 09 Nov 2021 10:49 AM
Last Updated : 09 Nov 2021 10:49 AM
என்னுடைய பணிச்சுமையை சமாளிக்கவும் ஒழுங்குபடுத்தவும் இதுதான் சரியான நேரம் என்பதால் டி20 கேப்டன் பதவியிலிருந்துவிலகினேன். என்னுடைய ஆக்ரோஷம் களத்தில் குறையும்போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவிடுவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
துபாயில் நேற்று நடந்த நமிபியா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. இந்தப் போட்டியுடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டார். இந்திய அணிக்கு அடுத்து புதிதாக கேப்டன் நியமிக்கப்பட உள்ளது.
இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாகத் திகழ்ந்த விராட் கோலி, ஐசிசி தொடர்களில் சாம்பியன்ஷிப் வெல்லமுடியாத குறையுடன் விடைபெற்றார். இந்த வெற்றிக்குப்பின் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:
அனைத்து உணர்்ச்சிகளில் இருந்தும் முதலில் விடுபடுகிறேன். நான் இந்தியஅணிக்கு கேப்டனாக இருந்தது மிகப்பெரிய கவுரவம். ஆனால், அனைத்தையும் சரியான கண்ணோட்டத்தில் வைக்க வேண்டும்.
என்னுடைய வேலைப்பளுவை நிர்வகிப்பதற்கும், சமநிைலப்படுத்துவதற்கும் இதுதான் சரியான நேரம். 6 முதல் 7 ஆண்டுகளா தீவிரமான கிரிக்கெட் விளையாடினேன், களத்தில் எவ்வாறு இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒரு குழுவாக, அணியாக நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். இந்த உலகக் கோப்பையைவிட்டு மிக தொலைவு செல்லவில்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் டி20 போட்டியில் மகிழ்ச்சியாக ஒன்றாக இணைந்து விளையாடிய சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.
டி20 கிரிக்கெட் என்பது மார்ஜின் விளையாட்டு. முதல் இரு ஓவர்களைப் பற்றி உள்நோக்கத்துடன் நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், சில விஷயங்கள் வித்தியாசமானவை. நான் ஏற்கெனவே கூறியதுபோல், நாங்கள் துணிச்சலாக இல்லை. டாஸில் தோல்வி அடைந்தோம் என்று தோல்விக்கு காரணம் கூறும் அணியும் நாங்கள் அல்ல.
எங்களுக்கு உதவியாக இருந்த பயிற்சியாளர்கள், ரவி சாஸ்திரி ஆகியோருக்கு மிக்க நன்றி. கடந்த சில ஆண்டுகளாக அருமையாகப் பணியாற்றி ஒற்றுமையாக வழிநடத்திநார்கள், எங்களைச் சுற்றி சிறந்த சூழலை உருவாக்கி, குடும்பமாக இருந்தார்கள். கிரிக்கெட்டுக்கு ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி
நான் கேப்டன் பதவியிலிருந்து இறங்கினாலும், என்னுடைய ஆக்ரோஷம், உற்சாகம் களத்தில் குறையாது. களத்தில் என்னுடைய ஆக்ரோஷம் குறையும்போது நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிடுவேன். நான் கேப்டனாக இல்லாத காலகட்டத்தில்கூட நான் ஒவ்வொரு போட்டியும் எவ்வாறு செல்கிறது என்பதை கவனித்துக்கொண்டிருப்பேன். நான் வெறும் ஆளாக நின்றுகொண்டிருக்கமாட்டேன்.
சூர்யகுமார் யாதவுக்கு இந்த உலகக் கோப்பையில் விளையாட அதிகமான அவகாசம் கொடுக்கப்படவி்ல்லை. அவர் சிறந்த நினைவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே அவரை 3-வது வீரராக களமிறக்கினேன். இளம்வீரர் சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பையிலிருந்து புறப்படும்போது, வெற்றி என்ற நல்லநினைவுகள் அவர்மனதில் இருக்கவேண்டும்
இவ்வாறு கோலி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT