Published : 08 Nov 2021 08:40 AM
Last Updated : 08 Nov 2021 08:40 AM

பாகிஸ்தானின் சாதனை நாயகர்கள் பாபர் ஆஸம், ரிஸ்வான்: கோலி, கெயில் நீண்டகால சாதனை முறியடிப்பு

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், இந்திய கேப்டன் விராட் கோலி | படம் உதவி ட்விட்டர்

ஷார்ஜா

ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இருவரும் புதிய மைல்கல்லை எட்டினர்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்த அணியை 72 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. 190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த 5 ரன்களை ரிஸ்வான் சேர்த்தபோது, கடந்த 2015ம் ஆண்டு முதல் தகர்க்கமுடியாத கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்தார். 2015ம் ஆண்டில் கிறி்ஸ் கெயில், 36 டி20 போட்டிகளில், 1665 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் கெயில் 3 சதங்கள், 10 அரைசதங்களை அடித்திருந்தார்.

ஆனால், கெயிலின் 6ஆண்டுக்கு முந்தைய சாதனையை முறியடித்த ரிஸ்வான் இந்த ஆண்டில் 1,676 ரன்கள் சேர்த்தார். இதில் ரிஸ்வான் இந்த ஆண்டில் மட்டும், ஒரு சதம் உள்ளிட்ட 15 அரைசதங்களை அடித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், ஒரே உலகக் கோப்பையில் அதிகமான அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸி. முன்னாள்வீரர் மேத்யூ ஹேடனின் சாதனையை சமன் செய்துள்ளார். 2014ம் ஆண்டில் விராட் கோலி 4 அரைசதங்களையும், மேத்யூ ஹேடன் 2007ம் ஆண்டில் 4 அரைசதங்களையும் அடித்திருந்தனர். அதை பாபர் ஆஸம் தற்போது சமன் செய்துள்ளார்

அதுமட்டுமல்லாமல் விராட் கோலி, ஒரே ஆண்டில் அதிகமான அரைசதங்களை அடித்து சாதனை படைத்திருந்தார். கடந்த 2016் ஆண்டில் விராட் கோலி 18 அரைசதங்கள், 4 சதங்கள் அடித்திருந்தார்.
ஆனால், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், இந்த ஆண்டில் 19 அரைசதங்களை அடித்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். பாபர் ஆஸம் இந்த ஆண்டில் 2 சதங்களையும் அடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x