Published : 06 Nov 2021 10:25 AM
Last Updated : 06 Nov 2021 10:25 AM
இந்திய அணிக்கு எதிராக இம்மாதம் தொடங்க இருக்கும் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் முடிந்தபின், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி, 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. கான்பூரில் இம்மாதம் 25 முதல் 29ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், மும்பையில் டிசம்பர்3முதல் 7ம் தேதிவரை 2-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.
இந்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கான நியூஸிலாந்து அணி அறிவி்க்கப்பட்டுள்ளது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம், டிரன்ட் போல்ட், கோலின் டி கிராண்ட்ஹோம் ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது
மிட்ஷெல் சான்ட்னருடன் இணைந்து சுழற்பந்துவீச்சில் கலக்க மும்பையில் பிறந்த அஜாஸ் படேல், வில்லியம் சோமர்வில்லே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடப்பு டெஸ்ட் சாம்பியனான நியூஸிலாந்து அணி, இந்தியாவுடன் மோதும் இரு டெஸ்ட் போட்டிகளும் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் சேர்க்கப்படும்.
கடந்த 2018-19ம் ஆண்டு ஐக்கிய அரபுஅமீரகத்தில் நடந்த டெஸ்ட் போட்டியிலும், இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரிலும் 28 விக்கெட்டுகளை அஜாஸ் படேலும், சோமர்வில்லேயும் எடுத்துள்ளனர் என்பதால், இருவரும் இந்தியத் தொடரில் சேர்க்கப்பட்டனர்.
இது தவிர, ரச்சின் ரவிந்திரா, க்ளென் பிலிப்ஸ் ஆகிய இரு ஆல்ரவுண்டர் வீரர்களும் அறிமுகமாகின்றனர். ரவிந்திரா இதற்கு முன் இங்கிலாந்து பயணத்தில் கடந்த ஜூன் மாதம் சென்றார் ஆனால் களமிறங்கவில்லை.
வேகப்பந்துவீச்சுக்கு டிம் சவுதி, நீல்வேக்னர், கெயில் ஜேமிஸன் ஆகியோர் மட்டும் உள்ளனர். விக்கெட் கீப்பராக இருந்த பிஜே வாட்லிங் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து டாம் பிளென்டல் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து அணி விவரம்:
கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), ஹென்ரி நிக்கோலஸ், வில் சோமர்வில்லே, டாம் பிளென்டல், டிம் சவுதி, அஜாஸ்படேல், கான்வே, கிளென் பிலிப்ஸ், ரோஸ் டெய்லர், ரச்சின் ரவிந்திரா, கெயில் ஜேமிஸன், டாம் லாதம், நீல் வேக்னர், வில் யங், மிட்ஷெல் சான்ட்னர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT