Published : 04 Nov 2021 02:23 PM
Last Updated : 04 Nov 2021 02:23 PM
அஸ்வின் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு திரும்பிவந்திருப்து பாசிட்டிவான விஷயம். அரையிறுதிக்கு தகுதிபெறுவோம் என சிறிய நம்பிக்கையிருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 வி்க்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்து 66 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, கடந்த 2 போட்டிகளாக என்னை ஒதுக்கிவைத்தது தவறு என்பதை அஸ்வின் நேற்று நிரூபித்துவிட்டார். 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட் பந்துகள் ஏறக்குறைய 2 ஓவர் மெய்டன். அஸ்வினைவிட நேற்று இந்திய அணியில் பந்துவீசிய அனைவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல்தான் விட்டுக் கொடுத்தனர்.
ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப்பின் மீ்ண்டும் வொயிட்-பால் போட்டிகளுக்குத் திரும்பிய அஸ்வின், தன்னைத் தேர்வு செய்தது சரியானது என நிரூபித்துள்ளார். போட்டியின் வெற்றிக்குப்பின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
ரவிச்சந்திர அஸ்வின் மீண்டும் வொயிட்-பால் பார்மட்டுக்கு நல்ல முறையில் திரும்பி வந்திருப்பது சாதகமான அம்சமாகப் பார்க்கிறேன். வலைப்பயிற்சியில் கடினமாக பயிற்சி செய்ததன் விளைவாக அஸ்வினால் சிறப்பாகப் பந்துவீச முடிந்தது
ஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் கட்டுக்கோப்புடனும், ரிதத்துடனும் பந்துவீசினார். குறிப்பாக அஸ்வின் விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர், ஸ்மார்ட்டான பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.
நாங்கள் அணியின் கூட்டத்தில் பேசும்போது அரையிறுதிக்குச்செல்வதற்கு இன்னும் வாய்ப்புக் கதவு மூடப்படவி்ல்லை, சிறிய வாய்ப்புஇருக்கிறது என்று தெரிவித்துள்ளோம்.அந்த நம்பிக்கையுடன் விளையாடுகிறோம்.
கடந்த இரு போட்டிகளிலும் இருந்த ஆடுகளத்தைவிட அபு தாபி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்தது. அதேநேரம் ஆப்கானிஸ்தான் அணி கடந்த போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசி, எங்களை போட்டியிலிருந்து வெளியேறவிடாமல் பார்த்துக் கொண்டனர்
இவ்வாறு கோலி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...